காட்டு எருமை முட்டி வாலிபர் படுகாயம்!

செவ்வாய், 28 அக்டோபர் 2008 (15:28 IST)
பவானிசாகர் அருகே காட்டு எருமை முட்டியதில் வாலிபர் ஒருவரின் வயிறு கிழந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தெங்குமரஹடா அருகே உள்ள அல்லிமாயாறு பகுதியை சேர்ந்தவர் சந்திரன் (39). இவர் தெங்குமரஹடா சென்று தீபாவளிக்காக பொருட்களை வாங்கிக்கொண்டு அல்லிமாயாறுக்கு நடந்து சென்றுள்ளார்.

வனப்பகுதியில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த காட்டெருமை ஒன்று, சந்திரனை பார்த்தவுடன் மிரண்டது. பின் அது வனப்பகுதிக்குள் செல்லாமல் சாலை‌யி‌ல் நடந்து சென்ற சந்திரன் மீது வேகமாக வந்து முட்டியது.

இதனா‌ல் அவர் வயிற்றில் காய‌ம் ஏ‌ற்ப‌ட்டது. தகவல் தெரிந்தவுடன் அப்பகுதி மக்கள் சந்திரனு‌க்கு முதலுதவி செய்து சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிரசிகிச்சை அளித்து வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்