மதுரை அருகேயுள்ள கப்பலூரில் தனியார் தொழிற்பேட்டை ஒன்றில் காவலாளிகள் 2 பேரை கொலை செய்து விட்டு, பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.
மதுரையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கப்பலூர். இங்குள்ள தனியார் தொழிற்பேட்டையில் நேற்று இரவு நேரக் காவலில் பழங்காநத்தத்தை சேர்ந்த மணிவண்ணன்,மூர்த்தி இருவரும் ஈடுபட்டிருந்தனர்.
நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் சிலர், காவலாளிகள் இருவரையும் கொலை செய்து விட்டு தொழிற்பேட்டையில் இருந்த பணத்தைக் கொள்ளையடித்துச் சென்று விட்டனர். கொள்ளை போன பணத்தின் மதிப்பு குறித்து உடனடியாகத் தெரியவில்லை.
இந்த கொலை - கொள்ளை குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மர்ம நபர்களைத் தேடி வருகிறார்கள்.