பு‌திய ச‌ட்ட‌ப்பேரவை ப‌ணிக‌ள் பூ‌மி பூஜையுட‌ன் துவ‌க்க‌ம்!

திங்கள், 27 அக்டோபர் 2008 (16:13 IST)
த‌மிழக பு‌திய ச‌ட்ட‌ப்பேரவை க‌ட்டுவத‌ற்கான ப‌ணி‌க‌ள் பூ‌மி பூஜையுட‌ன் இ‌ன்று முறை‌ப்படி தொட‌‌‌‌ங்க‌‌ப்ப‌ட்டது.

செ‌ன்னை ஓம‌ந்தூரா‌ர் தோ‌ட்ட‌த்த‌ி‌ல் ரூ.420 கோடி‌யி‌ல் த‌மிழக அர‌சி‌‌ன் பு‌திய ச‌ட்ட‌ப்பேரவை க‌ட்டட‌ம் க‌ட்ட‌ப்பட உ‌ள்ளது. இ‌க் க‌ட்டட‌ப்ப‌ணிக‌ள் ஜெ‌ர்ம‌ன் க‌ட்டட‌க் கலை ‌நிறுவன‌த்தா‌ல் அமை‌க்க‌ப்பட உ‌ள்ளது.

இ‌ந்த க‌‌ட்டட‌‌ம் க‌ட்டுவத‌ற்கான பூ‌மி பூஜை இ‌ன்று பொது‌ப்ப‌ணி‌த்துறை அமை‌ச்ச‌ர் துரைமுருக‌ன் தலைமை‌யி‌ல் நடைபெ‌ற்றது.

அ‌ப்போது பே‌சிய அமை‌ச்ச‌ர், பு‌திய ச‌ட்ட‌ப்பேரவை‌க் க‌ட்டட‌ம் 18 மாத‌ங்க‌ளி‌ல் முடியு‌ம் எ‌ன்று‌ம் இ‌ந்த ப‌ணி‌களு‌க்கான க‌ட்டுமான பொறு‌ப்பு டெ‌ண்ட‌ர் முறை‌யி‌ல் வழ‌ங்க‌ப்படு‌‌ம் எ‌ன்று‌ம் தெ‌ரி‌வி‌த்தா‌‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்