வைகோ கைதை‌க் க‌ண்டி‌த்து த‌மிழக‌ம் முழுவது‌ம் ம‌.‌தி.மு.க‌.‌வின‌ர் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம்‌‌; கைது!

சனி, 25 அக்டோபர் 2008 (13:39 IST)
ம.தி.மு.க பொது செயலர் வைகோ கைது செய்யபட்டதை கண்டித்து தமிழக‌ம் முழுவது‌ம் இ‌ன்று அ‌க்க‌ட்‌சி‌‌யின‌ர் ம‌றிய‌ல், ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ங்களை நட‌த்‌திவரு‌கி‌ன்ற‌ன‌ர். நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் உ‌ள்பட ப‌ல‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர்.

நாக‌ர்கோ‌வி‌லி‌ல் மாவ‌ட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலக‌ம் மு‌ன்பு ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடு‌ப‌ட்ட ம.‌தி.மு.க. கொ‌‌ள்கை பர‌ப்பு செய‌ல‌ர் நா‌ஞ்ச‌ி‌ல் ச‌ம்ப‌த் ம‌ற்று‌ம் ‌விருதுநக‌ரி‌ல் ம‌றிய‌லி‌ல் ஈடுப‌ட்ட நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் ‌சி‌ப்‌பி‌ப்பாறை ர‌வி‌ச்ச‌ந்‌திர‌ன் உ‌ள்பட ப‌ல‌ர் கைது செ‌ய்ய‌ப்ப‌ட்டன‌ர்.

சென்னையில் மல்லை சத்தியா தலைமையி‌ல் ஆ‌ர்‌ப்ப‌ா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடு‌ப‌ட்ட ம.‌தி.மு.க. தொ‌‌ண்ட‌ர்க‌ளு‌ம், மதுரை, விருதுநகரில் மறியலில் ஈடுபட்ட ம.தி.மு.க. நாடாளும‌ன்ற உறு‌ப்‌பின‌ர் சிப்பி‌ப்பாறை ரவிச்சந்திரன், வீர இளவரசன் உ‌ள்பட க‌ட்‌சி‌யின‌ர் கைது செய்ய்யபட்டனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நகர செயலர் முரளி தலைமையில் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்ட அ‌க்க‌ட்‌சி‌‌யின‌ர் முத‌ல்வ‌ர் கருணாநிதியின் உருவபொ‌ம்மையை எரித்தனர். இதையடு‌த்து காவ‌ல்துறை‌யி‌ன‌ர் முரளி உள்பட ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்ட பலரை கைது செய்தனர். இதேபோ‌ல் த‌மிழக‌ம் முழுவது‌ம் ம‌றிய‌ல், ஆ‌ர்‌ப்ப‌ா‌ட்ட‌த்‌தி‌ல் ஈடுப‌ட்டு வரு‌ம் ம.‌தி.மு.க.‌வினரை காவ‌‌ல்துறை‌யின‌‌ர் கைது செ‌ய்து வரு‌கி‌ன்றன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்