கூ‌ட்டா‌ட்‌சி அடி‌ப்படை‌யி‌‌ல் ‌தீ‌ர்வு: பழ.நெடுமாறன்!

வியாழன், 23 அக்டோபர் 2008 (10:13 IST)
இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளோடு வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும் எ‌ன்று‌ம், பிரதமர் மன்மோகன்சிங் இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று‌ம் தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புககுழுவின் அமைப்பாளரபழ.நெடுமாறன் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இலங்கையில் போரை உடனடியாக நிறுத்தி, இனச் சிக்கலுக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி பிரதமர் மன்மோகன்சிங் தொலைபேசியில் வலியுறுத்திய பிறகும் போரை நிறுத்த இலங்கை அரசு முன்வரவில்லை.

போரை ஒரு போதும் நிறுத்த முடியாது என இந்தியாவுக்கும், சர்வதேச சமூகத்துக்கும் தெரிவித்து விட்டதாகவும் இறுமாப்புடன் இலங்கை அதிபர் ராஜப‌‌‌க்சே கூறியுள்ளார்.

இலங்கைத் தமிழர்கள் சகல உரிமைகளோடு வாழ்வதற்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் கூட்டாட்சி அடிப்படையில் தீர்வு காணப்பட வேண்டும். ராணுவ ரீதியில் தீர்வு கூடாது என்பதுதான் இந்திய அரசின் கொள்கை என்பதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன்சிங்கும் அமைச்சர்களும் சொல்லி வருகிறார்கள். ஆனால் ராஜப‌‌க்சே அரசு கூட்டாட்சி அடிப்படையையே ஏற்க மறுத்துவிட்டது.

தமிழக முதல்வர் கருணாநிதி தலைமையில் அனைத்துக்கட்சிக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் அடிப்படையில் மன்மோகன்சிங், ராஜப‌க்சேவுடன் பேசிய பேச்சு உரிய விளைவை ஏற்படுத்தவில்லை. வல்லரசான இந்தியாவின் நியாயமான வேண்டுகோளைப் புறக்கணித்து இந்திய இறையாண்மைக்கு ராஜப‌க்சே அறைகூவல் விடுத்திருக்கிறார்.

இந்தத் துணிவு அவருக்கு வருவதன் பின்னணியில் இந்தியாவுக்கு எதிரான சில நாடுகள் உள்ளன என்பது அப்பட்டமான உண்மையாகும். தமிழக மக்களின் ஒன்றுபட்ட கோரிக்கையை நிறைவேற்றுவதற்கு உரிய, இன்னும் தீவிரமான நடவடிக்கைகளை பிரதமர் மன்மோகன்சிங் மேற்கொள்ள வேண்டும் என்று தமிழர்கள் அனைவரும் எதிர்பார்க்கின்றனர்.

ராஜப‌க்சே அரசைக் காப்பாற்றுவதற்காக இந்தியாவின் அரசியல் ஸ்திரத்தன்மையை இழக்க பிரதமர் மன்மோகன்சிங் தயாராக இருக்கிறாரா என்பதுதான் தமிழக மக்களிடையே எழுந்துள்ள கேள்வியாகும்'' எ‌ன்று பழ.நெடுமாற‌ன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.