செய்யூரில் 16 செ.மீ மழை!
செவ்வாய், 21 அக்டோபர் 2008 (17:43 IST)
தமிழகத்தில் நேற்று பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காஞ்சிபுரம் மாவட்டம் செய்யூரில் 16 செ.மீ மழை பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செம்பரம்பாக்கம், சோழவரம் ஆகிய இடங்களில் தலா 12 செ.மீ மழையும், ராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை, திருச்சி மாவட்டம் மருங்காபுரி, சமயபுரம், திண்டுக்கல் மாவட்டம் பழனி ஆகிய இடங்களில் தலா 11 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், சென்னை அண்ணா பல்கலைக்கழகம், தேனி மாவட்டம் உத்தமபாளையம், பெரியகுளம், புதுக்கோட்டை ஆகிய இடங்களில் தலா 10 செ.மீ மழையும், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி, செங்குன்றம் கடலூர், தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு, தூத்துக்குடி மாவட்டம் சூரங்குடி, தூத்துக்குடி, உதகமண்டலம், தேனி, புதுச்சேரி, புதுக்கோட்டை மாவட்டம் பெருங்கலூர், கோவை மாவட்டம் பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 9 செ.மீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், தாம்பரம், ஈரோடு மாவட்டம் தாராபுரம், கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி ஆகிய இடங்களில் தலா 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னை காவல்துறை தலைமை அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம் பூண்டி, விழுப்புரம் மாவட்டம் வானூர், தஞ்சாவூர் மாவட்டம் கல்லணை, நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, தொண்டி, ஈரோடு, கரூர் பரமத்தி, திருச்சி மாவட்டம் லால்குடி, புதுக்கோட்டை மாவட்டம் திருப்பத்தூர், பரங்கிப்பேட்டை, கந்தார்வகோட்டை, கீரனூர், விராலிமலை, கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, கோவை மாவட்டம் சின்னக்கல்லார், திண்டுக்கல் மாவட்டம் சாராப்பட்டி ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பெய்துள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம், ஏற்காடு, நாகப்பட்டினம் தரங்கம்பாடி, காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம், திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி, கொரட்டூர், திருவாரூர் மாவட்டம் திருவிடைமருதூர், மன்னார்குடி, நன்னிலம், ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம், மணியாச்சி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர், ஈரோடு மாவட்டம் முலனூர், கரூர் மாவட்டம் மாயனூர், அரியலூர், திருச்சி, சிவகங்கை மாவட்டம் காரைக்குடி, மானாமதுரை, புதுக்கோட்டை மாவட்டம் திருமயம், திண்டுக்கல் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருவாரூர், கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில், செஞ்சி, உளூந்தூர்பேட்டை, தஞ்சாவூர் மாவட்டம் முடுகூர், பட்டுக்கோட்டை, நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம், புதுக்கோட்டை மாவட்டம் அரியமங்கலம், அறங்தாங்கி, திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, நாமக்கல், ஈரோடு மாவட்டம் சத்யமங்கலம், குன்னூர், கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி, கடவூர், திருச்சி விமான நிலையம், மதுரை மாவட்டம் பெரையூர், தேனி மாவட்டம் ஆன்டிப்பட்டி, சிவகங்கை மாவட்டம் தேவக்கோட்டை, இளையான்குடி, கோவை விமான நிலையம், கடலூர் மாவட்டம் பண்ருட்டி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஆகிய இடங்களில் 5 செ.மீ மழை பெய்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டை, விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, ஆய்குடி, பாளையங்கோட்டை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம், சாத்தான்குளம், தர்மபுரி மாவட்டம் காரூர், நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம், ஈரோடு மாவட்டம் பெருந்துறை, மதுரை மாவட்டம் திருமங்கலம், தேனி மாவட்டம் போடிநாயக்கனூர், பெரியார் அணை, கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம், திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆகிய இடங்களில் தலா 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது.