தொண்டியில் 16 செ.மீ மழை!
திங்கள், 20 அக்டோபர் 2008 (18:07 IST)
தமிழகத்தில் நேற்று பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது. ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அதிகபட்சமாக 16 செ.மீ மழையும், மங்கலத்தில் 15 செ.மீ மழையும் பெய்துள்ளது.
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, விருதுநகர் மாவட்டம் கோயிலங்குளத்தில் 8 செ.மீ மழையும், முதுகுளத்தூர், ராமநாதபுரம், ராமேஸ்வரம், காங்கேயம், கரூர் மாவட்டம் கடவூர் ஆகிய இடங்களில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சிவகிரி, திருப்பூர் ஆகிய இடங்களில் தலா 6 செ.மீ மழை பெய்துள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், பரமக்குடி, தூத்துக்குடி, குளித்துறை, மேட்டூர் அணை, அவிநாசி, பவானிசாகர், பெரியாறு அணை ஆகிய இடங்களில் தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சேலம், பூந்தமல்லி, ராயக்கோட்டை, நடுவட்டம், கரூர், போடியநாயக்கனூர், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர் ஆகிய இடங்களில் 4 செ.மீ மழை பெய்துள்ளது.
அடுத்த இரண்டு நாட்களில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்து 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே பலத்த மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.