நடிகை ஊர்வசிக்கு விவாகரத்து வழ‌‌ங்‌கியது ‌நீ‌திம‌ன்ற‌ம்!

திங்கள், 20 அக்டோபர் 2008 (14:56 IST)
சென்னை : கணவருட‌‌னஏ‌ற்ப‌ட்கரு‌‌த்தவேறுபாடகாரணமாக ‌விவாகர‌த்தகே‌ட்ட ‌பிரபத‌மி‌ழநடிகஊ‌ர்வ‌சி‌க்கு, செ‌ன்னகுடு‌ம்பநல ‌நீ‌திம‌ன்ற‌‌மஇ‌ன்று ‌விவாகர‌த்தவழ‌ங்‌கியது.

webdunia photoFILE
த‌மி‌ழி‌‌ல் ‌பிரபநடிகையாஇரு‌ந்நடிகை ஊர்வசி, த‌ன்னகணவர் கொடுமைப்படுத்துவதாகக் கூறி சென்னை குடும்பநல ‌நீ‌திம‌ன்ற‌த்‌தில் கட‌ந்த மே மாத‌ம் வழக்கு தொடர்ந்தார். இ‌ந்‌த வழ‌க்கு ‌விசாரணை நீதிபதி கலையரசன் முன்பு நடந்து வந்தது.

கடந்த மாத விசாரணையின் போது இருவரையும் சமரசப்படுத்தும் வகையில் இவ்வழக்கு சமரச மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு சுமார் 3 மணி நேரம் சமரச மைய உறுப்பினர்கள் முன்பு நட‌ந்த பேச்சுவார்த்தை‌யி‌ல் சமரசம் ஏற்படவில்லை.

இதையடுத்து, இருவரும் நீதிபதி முன்பு ஆஜராகி பிரிந்து செல்ல முடிவு செய்திருப்பதாக தெரிவித்தனர். இதன்பின் கடந்த வெள்ளிக்கிழமை இரு தரப்பினரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்த செல்ல முடிவு செய்துள்ளதாக கூறி மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு நீதிபதி கலையரசன் முன்பு இன்று காலை விசாரணைக்கு வந்தது. அப்போது ஊர்வசியும், அவரது கணவ‌‌ர் மனோஜ் கே.ஜெயனும் ஆஜராகவில்லை.

ஆனாலும் நீதிபதி இருவரும் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் பிரிந்த செல்ல முடிவு செய்திருப்பதால் அவர்களுக்கு விவாகரத்து வழங்குவதாக உத்தரவிட்டார்.