இலங்கையில் வாழும் தமிழர்கள் மீது அந்நாட்டு இராணுவம் நடத்தி வரும் தாக்குதலைக் கண்டித்து கரூரில் இலங்கைத் தமிழ் அகதிகள் இன்று உண்ணாவிரதம் இருந்தனர்.
தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு இந்திய அரசு தலையிட வேண்டும் என்று வலியுறுத்தி, கரூர் அருகேயுள்ள இரும்பூதிப்பட்டி அகதிகள் முகாமில் தங்கியிருப்பவர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர்.
இலங்கையில் ராணுவத்தினரின் தாக்குதலால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்களை அனுப்பி வைக்கவும், அத்யாவசியப் பொருட்கள் கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு ஆவன செய்ய வேண்டும் என்று உண்ணாவிரதத்தில் பங்கேற்ற அகதிகள் கேட்டுக் கொண்டனர்.