மனித‌ச்சங்கிலி போராட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும்: கிருஷ்ணசாமி!

திங்கள், 20 அக்டோபர் 2008 (12:31 IST)
''இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெற உள்ள மனித‌சங்கிலி போராட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும்'' எ‌ன்றஅ‌க்க‌ட்‌சி‌யி‌னதலைவ‌ரடா‌க்ட‌ர் ‌‌கிரு‌‌ஷ்ணசா‌மி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இததொட‌‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் மாண்டு மடியும் தமிழினத்தை காப்பாற்ற இப்பொழுது தமிழகம் போர்க்கோலம் கொண்டுள்ளது எ‌ன்று‌மஒரு கட்டத்தில் சுய நிர்ணய உரிமைக்காக போராட்டத்தை துவங்கிய தமிழன் இன்று தனது உயிரை பாதுகாத்துக் கொள்ள ஓடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது எ‌ன்று‌மகூ‌றியு‌ள்ளா‌ர்.

இலங்கை வாழ் பூர்வீக மற்றும் மலையக தமிழர்களின் அடிப்படை உரிமைகளை அங்கீகரிக்க சிங்கள பேரினவாத ராஜபக்சே அரசு மறுக்கிறது எ‌ன்றகு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள ‌கிரு‌‌ஷ்ணசா‌மி, இலங்கையில் கடைசி தமிழனும் அழிக்கப்பட்டு விடுவானோ என்ற ஆதங்கம் நம்மையெல்லாம் வாட்டி வதைக்கிறது எ‌ன்றவேதனத‌ெ‌ரி‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

அனைத்துக்கட்சி கூட்டத்தில் எடுத்த முடிவின்படி இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிரான போரை நிறுத்திட இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி நாளை சென்னையில் நடைபெற உள்ள மனித சங்கிலி போராட்டத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும் எ‌ன்றதெ‌ரி‌‌வி‌த்து‌ள்ள ‌கிரு‌‌ஷ்ணசா‌மி, இந்த போராட்டத்தில் கட்சியின் தொண்டர்கள், கொடி மற்றும் பதாகைகளுடன் அண்ணா சாலையில் உள்ள சிலை அருகே மாலை 3 மணிக்கு திரளாக கூட வேண்டும் என்று கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.