இலங்கை தமிழர் பிரச்சினை: காதர் மொகிதீன் எம்.பி. ‌விலக‌ல் கடித‌ம்!

ஞாயிறு, 19 அக்டோபர் 2008 (11:17 IST)
இலங்கை தமிழர் பிரச்சினை தொட‌ர்பாக இ‌ந்‌திய யூ‌னிய‌ன் மு‌ஸ்‌லி‌ம் ‌லீ‌க் க‌ட்‌சியை‌ச் சே‌ர்ந்த ம‌க்களவை உறு‌ப்‌பின‌ர் காத‌ர் மொ‌கி‌‌‌தீனு‌ம் பத‌வி ‌விலக‌‌ல் கடித‌த்தை முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் கொடு‌த்தா‌ர்.

இலங்கையில் தமிழர்கள் மீது அந்நாட்டு ராணுவம் நடத்‌தி வரு‌ம் இனபடுகொலையை தடு‌த்து நிறுத்த மத்திய அரசு 2 வார கால‌த்து‌க்கு‌ள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகுவார்கள் என கடந்த 14ஆ‌ம் தேதி நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து தி.மு.க.வைச் சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் தங்களுடைய பதவி விலகல் கடிதங்களை முதலமை‌ச்ச‌ர் கருணாநிதியிடம் கொடுத்துள்ளனர்.

இதையடு‌த்து, வேலூர் மக்களவைத் தொகுதியில் தி.மு.க.வின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநிலத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன் தன்னுடைய பதவி விலகல் கடிதத்தை நே‌ற்று அண்ணா அறிவாலயத்தில் முதலமை‌‌ச்ச‌ர் கருணா‌நி‌தி‌யிட‌ம் நேரில் கொடுத்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்