மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் அ.இ.அ.தி.மு.க. சார்பில் வரும் 20ஆம் தேதி ஊட்டியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச் செயலர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
webdunia photo
FILE
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நீலகிரி மாவட்டம், தும்மனட்டி ஊராட்சியைச் சேர்ந்த பட்டாகம்மி, பாரதி நகர், மேல்குந்த சப்பை, கீழ்குந்த சப்பை, மடித்துரை உள்ளிட்ட 30 கிராமங்களில் வாழும் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் எதையும் தி.மு.க. அரசு செய்து தரவில்லை என அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
அ.இ.அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினராக இருப்பதால், அரசியல் காரணமாக மக்களின் தேவைகளை நிறைவேற்றாமல், தி.மு.க. அரசின் தூண்டுதலின் பேரில் மாவட்ட நிர்வாகம் புறக்கணிப்பதாகவும் செய்திகள் வருகின்றன.
எனவே, தும்மனட்டி ஊராட்சிப் பகுதி மக்களின் அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றாத தி.மு.க. அரசைக் கண்டித்தும், உடனடியாக மக்களின் கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும், நீலகிரி மாவட்டக் அ.இ.அ.தி.மு.க. சார்பில், வரும் 20ஆம் காலை 11 மணி அளவில், உதகமண்டலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.