''குடும்பம் குடும்பமாய் மனித சங்கிலி அணிவகுப்பில் தமிழர்கள் பங்கேற்க வேண்டும்'' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.
webdunia photo
FILE
இதுதொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,'' அக்டோபர் 21ஆம் தேதி சென்னையில் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது என முதலமைச்சர் கருணாநிதி விடுத்துள்ள அழைப்பு காலத்தால் செய்யப்பட்ட கடமை அறிவிப்பாகும் என்றும் இதில் மனித நேய உணர்வோடு அலை அலையாய், அணி அணியாய் தமிழர்கள் குடும்பம் குடும்பமாய் கூடுவோம் வாரீர் என்று அழைப்பு விடுத்துள்ளார்.
''ஊர் சிறுத்தது; உணர்வு பெருத்தது என்று கூறத்தக்க வகையில் மனிதச் சங்கிலி கோர்த்து நம்மினத்தை காத்திட கட்சிக்கு அப்பாற்பட்டு அனைவரும் அணிதிரள வேண்டும்'' என்று கி.வீரமணி கேட்டுக் கொண்டுள்ளார்.