மதுரையில் 3 காவல்துறை துணை ஆணையர்கள் உட்பட தமிழகம் முழுவதும் 10 காவல்துறை கண்காணிப்பாளர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில், மதுரை நகர காவல்துறை துணை ஆணையர் (சட்டம், ஒழுங்கு) ஆர்.ராம்ராஜன், தமிழ்நாடு கமாண்டோ படை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
துணை ஆணையர் (தலைமையகம்) ஜே.ரவீந்திரன், சென்னை தலைமையக உதவி காவல்துறை தலைமை ஆய்வாளராக மாற்றப்பட்டுள்ளார்.
போக்குவரத்து துணை ஆணையர் எஸ்.பிரபாகரன், தமிழ்நாடு சிறப்பு காவல்துறை பட்டாலியன் கமாண்டன்டாக வேலூர் மாவட்டம் சுந்தராம்பள்ளிக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.சண்முகவேல், கோவை நகர துணை ஆணையராக (குற்றம் மற்றும் போக்குவரத்து) மாற்றப்பட்டுள்ளார்.
கோவை காவல்துறை துணை ஆணையர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) கே.தொண்டிராஜ், மதுரை நகர துணை ஆணையராக (சட்டம், ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார்.
திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளர் என்.ராஜசேகரன், மதுரை நகர துணை ஆணையராக (குற்றம்) மாற்றப்பட்டு உள்ளார். இவர் மதுரை போக்குவரத்து துணை ஆணையருக்கான முழு கூடுதல் பொறுப்பையும் வகிப்பார்.
வேலூர் மாவட்டம் சுந்தராம்பள்ளியில் தமிழ்நாடு சிறப்பு காவல்துறை பட்டாலியனின் கமாண்டன்டாகப் பணியாற்றும் ஜே.ராஜேந்திரன், திருச்சி ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை தலைமையக உதவி காவல்துறை தலைமை ஆய்வாளர் பி.சாமுண்டீஸ்வரி, கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டுள்ளார்.
சென்னை புறநகர் போக்குவரத்து துணைக் ஆணையர் எஸ்.மனோகரன், சென்னை ரயில்வே காவல்துறை கண்காணிப்பாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி.கிருஷ்ணமூர்த்தி, சென்னை புறநகர் போக்குவரத்து துணை ஆணையராக மாற்றப்பபட்டுள்ளார்.
பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, அரியலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராகவும் கூடுதல் பொறுப்பு வகிப்பார் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.