சென்னை: மத்தியில் உள்ள அமைச்சர்கள் மற்றும் கட்சி எம்.பி.க்கள் பதவி விலகல் கடிதம் அனுப்பியுள்ளது குறித்து கூறிய போது முதல்வர் கருணாநிதி ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கத்துடன் செயல்படவில்லை என்று கூறினார்.
அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த கருணா நிதி இலங்கை பிரச்சனையில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்ற கேள்விக்கு, மத்திய அரசிற்கு எவ்விவதமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது தெரியும் என்றும், தமிழர்களை பாதுகாப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இன்னொரு நாட்டின் உள்நாட்டு பிரச்சனையில் தலையிடுவது கூடாது என்று கூறப்படுகிறதே என்று கேட்டதற்கு, வங்கதேசத்தை விடுவித்தது எப்படி? அதற்காக துப்பாக்கிக்கு துப்பாக்கிதான் தீர்வு என்று கூறவில்லை. அங்கே உருவாகும் அமைதியின் மூலமாகவும் தீர்வு காணமுடியும் என்றார்.
மத்திய அரசிற்கு 15 நாட்கள் கெடு விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதையடுத்து மத்திய அரசிடமிருந்து சாதகமான பதில் வரவில்லையெனில் கட்சியின் உயர்மட்டக் குழுவை கூட்டி முடிவெடுக்கவுள்ளதாக கருணாநிதி தெரிவித்தார்.
தயாநிதி மாறன் இன்னமும் பதவி விலகல் கடிதம் அனுப்பவில்லையே என்ற கேள்விக்கு பதில் அளித்த கருணாநிதி "நல்ல விஷயங்களைப் பேசுவோம்" என்றார்.