தி.மு.க. மத்திய அமைச்சர்கள் விலகல் கடிதம்!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (22:32 IST)
மத்தியில் உள்ள தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்களது பதவி விலகல் கடிதத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதியிடம் சமர்ப்பிட்துள்ளனர்.

கப்பல் போக்குவரத்து துறை மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, தொலை தொடர்புத் துறை அமைச்சர் ராஜா, சமூகநீதி இணை அமைச்சர் சுப்புலக்ஷ்மி ஜெகதீசன், மத்திய சுற்றுச்சூழல் இணை அமைச்சர் எஸ்.ரகுபதி, மத்திய நிதி இணை அமைச்சர் பழனிமாணிக்கம், மத்திய சட்ட இணை அமைச்சர் கே.வெங்கடபதி, மத்திய உள்துறை இணை அமைச்சர் வி.ராதிகா செல்வி ஆகியோர் தங்களது பதவி விலகல் கடிதத்தை கருணாநிதியிடம் அளித்துள்ளனர்.

இலங்கை தமிழர்கள் மீதான சிங்கள ராணுவ அடக்கு முறைகளுக்கு மத்திய அரசு தீர்வு காணவேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்மானம் இடப்பட்டதையடுத்து இந்த பதவி விலகல் கடிதங்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

பதவி விலகல் அளித்த தி.மு.க. மக்களவை உறுப்பினர்கள் விவரம் வருமாறு: சி.குப்புசாமி, கே.சி. பழனிச்சாமி, இ.ஜி. சுகவனம், விஜயன், பவானி ராஜேந்திரன், கிருஷ்ணசாமி, தனபால் வேணுகோபால் ஆகியோர்களாவர்.

தயா நிதி மாறன், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் எம்.பி. காதர் மொய்தீன், ஆகியோர் பதவி விலகல் கடிதம் அனுப்பவில்லை.

வெப்துனியாவைப் படிக்கவும்