ம‌னித‌ச் ச‌ங்‌கி‌லி: இளைஞர‌ணி‌க்‌கு மு.க.ஸ்டாலின் அழை‌ப்பு!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (17:12 IST)
இல‌ங்கை இராணுவ‌‌ம் நட‌த்‌தி வரு‌ம் த‌மி‌ழின‌ப் படுகொலையை தடு‌த்து ‌‌நிறு‌த்‌திட‌க் கோ‌ரியு‌ம், தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் இலங்கை கடற்படையினரின் செயலுக்கு நிரந்தர தீர்வுகான‌ கோ‌‌ரி வரு‌ம் 21ஆ‌ம் தே‌தி செ‌‌ன்னை‌யி‌ல் நடைபெறு‌ம் ம‌னித‌ச் ச‌ங்‌கி‌லி போரா‌ட்ட‌த்த‌ி‌ல் இளைஞர‌ணி‌யின‌ர் பெருமள‌வி‌ல் கல‌ந்து கொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று அமைச்சர் மு.க.ஸ்டாலின் அழை‌ப்பு ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இதுதொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், இலங்கை இராணுவத் தாக்குதல்களிலிருந்து இலங்கைவாழ் தமிழ் இனத்தாரைப் பாதுகாத்திட, அங்கே உடனடியாக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்பட, தமிழர்கள் அனைவரும் ஒரே உணர்வில் நின்று விடை காண வேண்டும் என்ற வேண்டுகோளை- தலைமைக் கழகத்தின் சார்பில் ''இலங்கைப் பிரச்சனையில் ‌தி.மு.க‌.‌வி‌ன் நிலையும்- மத்திய அரசுக்கு வேண்டுகோளு‌ம்'' எனும் பொருளில் சென்னையில் நடைபெற்ற மாபெரும் பொதுக் கூட்டத்தில் கருணா‌நி‌தி வேண்டுகோள் விடுத்ததோடு,

இலங்கை இராணுவத் தாக்குதல் தமிழினப் படுகொலை இவைகளை தடுத்து நிறுத்திட, தமிழர்கள் அனைவரும் பிரதமருக்கு தந்தி அனுப்பிட வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டதன் பேரில் லட்சக்கணக்கான தந்திகள் அனுப்பப்பட்டுள்ள நிலையிலும், இலங்கைத் தமிழர்கள் மீது அக்கறை கொண்டு அனைத்துக்கட்சி கூட்டத்தினையும் கூட்டி, இலங்கையில் இயல்பு நிலை திரும்பிட, இந்தியப் பேரரசு உடனடியாக நடவடிக்கை எடுத்திடவும், இலங்கை அரசுக்கு, இந்திய அரசு ஆயுத உதவி வழங்கிடுவதை உடனடியாக நிறுத்திடவும், பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உணவு, உடை மருந்து போன்றவற்றை மத்திய அரசு வழங்கிட வேண்டும்.

தமிழக மீனவர்களை கண்மூடித்தனமாகத் தாக்கும் இலங்கை கடற்படையினரின் செயலுக்கு நிரந்தர தீர்வுதான் வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

அவற்றில் ஒன்று 21.10.2008 செவ்வாய்க்கிழமை சென்னையில் நடைபெறும் மாபெரும் மனிதச் சங்கிலி அணிவகுப்பு.

தமிழர்கள் அனைவரும் இந்த மனிதச் சங்கிலி அணிவகுப்பில் பங்கேற்பர் எனினும், இளைஞர் அணியினர் பெருமளவில் பங்கேற்று தமது உணர்வை வெளிப்படுத்திட வேண்டும்.

அதற்கேற்ப, மாவட்ட, மாநகர, ஒன்றிய, நகர, பேரூர் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் தத்தமது பகுதிக்குட்பட்ட இளைஞர்களை பெருமளவில் திரட்டி வந்து அணிவகுத்திடச் செய்திடுமாறு அமை‌ச்ச‌ர் மு.க‌.‌ஸ்டா‌லி‌ன் கே‌ட்டு‌க் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.