செ‌ன்னை சா‌ஸ்‌தி‌ரிபவ‌னி‌ல் ‌பய‌ங்கர தீ ‌விப‌த்து!

வெள்ளி, 17 அக்டோபர் 2008 (11:40 IST)
செ‌ன்னை நு‌ங்க‌ம்பா‌க்க‌த்‌தி‌ல் உ‌ள்ள சா‌‌‌ஸ்‌‌தி‌ரிபவ‌னி‌ல் இ‌ன்று அ‌திகாலை ஏ‌ற்ப‌ட்ட ‌தீ‌ ‌விப‌த்‌தி‌ல் ஏராளமான ஆவண‌ங்க‌ள், கோ‌ப்புக‌ள் எ‌ரி‌ந்து சா‌ம்பலானது.

சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரிபவனில் கடவு ‌சீ‌ட்டு (பாஸ் போர்ட்) அலுவலகம் உள்பட 58 மத்திய அரசு நிறுவனங்கள் உள்ளன. இந்த கட்டடத்தின் முதல் மாடியில் அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழும தென்மண்டல அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இன்று அதிகாலை திடீரென இந்த அலுவலகத்தில் புகைவ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தது. இதை பார்த்த காவலாளி உடனடியாக தீயணைப்பு நிலை யத்துக்கு தகவல் கொடுத்தார்.

தீயணைப்பு வண்டி வருவதற்குள் பக்கத்தில் உள்ள மத்திய அரசு தொழில் துறை தீர்ப்பாயம் மற்றும் தொழிலாளர் நீதிமன்ற கட்டடத்திற்கும் தீ பரவியது. இதை‌த் தொட‌ர்‌ந்து தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு ஒரு மணி நேரத்திற்குள் தீயை போராடி அணைத்தனர்.

இ‌ந்த ‌தீ‌ விப‌த்தா‌ல் தொழில்நுட்ப கல்விக்குழும அலுவலகத்தில் இருந்த ஆவண‌ங்க‌ள், கோப்புகள், க‌ணி‌னிக‌ள், கு‌ளி‌ர்சாதன எ‌ந்‌திர‌ங்க‌ள் எரிந்து சாம்பலானதோடு ‌நீதிமன்ற அலுவலக கட்டடமு‌ம் பல‌த்த சேதம் அடை‌ந்து‌ள்ளது.

மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு அதிகாரிகள் தெரிவி‌த்து‌ள்ளன‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்