கருணா‌நி‌தி‌க்கு அமெரிக்க தமிழ்ச்சங்கம் நன்றி!

வியாழன், 16 அக்டோபர் 2008 (17:34 IST)
முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி கூ‌ட்ட‌த்‌தி‌ல், வரலாற்று தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமின்றி, உறுதியான செயற்பாட்டு முடிவுகளினாலும் இந்திய உப கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்'' எ‌ன்று அமெ‌ரி‌க்க இல‌ங்கை த‌மி‌ழ்‌ச்ச‌‌ங்க‌‌‌ம் பாரா‌ட்டி‌யு‌ள்ளது.

அமெரிக்க இலங்கை தமிழ்ச்சங்கத்தின் அறிக்கை வருமாறு: எமது அன்பிற்கும், மதிப்பிற்குமுரிய தமிழக மக்களே, அரசியற் தலைவர்களே, முதல்வர் கருணாநிதி அவர்களே, முதற்கண், தமிழீழத் தமிழர்களின் சார்பில், அமெரிக்க இலங்கை தமிழ்ச் சங்கத்தினராகிய நாங்கள், எம் இதயங்களின் ஆழத்திலிருந்து உங்களுக்கு எம் நன்றியையும், மரியாதையும் தெரிவித்துக்கொள்ள அனுமதியுங்கள்.

நீறுபூத்த நெருப்பென உள்ளேயே கனன்று கொண்டிருந்த நீங்கள், குமுறும் எரிமலையாக வெடித்து விட்டீர்கள், நீண்ட இடைவெளிக்கு பின்னர், ஒன்றாகக்கூடி ஒருமித்த குரலிலபலம் வாய்ந்த அரசியல் வார்‌த்தைகளில், தமிழீழத் தமிழர்கள் மீது உங்களுக்கு இருக்கும் அன்பையும், அவர்களது சுபிட்சமான அரசியல் எதிர்காலத்தின் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையையும் வெளிப்படுத்தி விட்டீர்கள்.

முதல்வர் கருணாநிதி கூட்டிய அனைத்துக்கட்சி மாநாட்டில் திரண்டு, வரலாற்று தீர்மானங்களை நிறைவேற்றி, வெறும் சொற்களால் மாத்திரமின்றி, உ‌று‌‌தியான செயற்பாட்டு முடிவுகளினாலும் உப கண்டத்தையே அதிர வைக்கும் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்து விட்டீர்கள்.

கட்சிகளின் வரம்புகளை துறந்து, அரசியலின் முரண்பாடுகளை மறந்து, மாநிலத்தின் சுவர்களை கடந்து, நாட்டின் எல்லைக்கும் அப்பால் 'இனத்தின் உணர்வால் இறுகப்பிணைக்கப்பட்ட தமிழர்கள் நாம்' என்பதை இந்த உலகிற்கு முரசறைந்து சொல்லிவிட்டீர்கள். 'தேர்தல் வெற்றியை நோக்கமாக கொண்ட வெறும் அரசியல் விளையாட்டு இது' என்று எள்ளி நகையாடியவர்களின் முகங்களில் அவமானத்தை பூசி விட்டீர்கள்.

முதல்வர் கருணாநிதி, ஒட்டு மொத்த உலகத் தமிழினத்தின் தலைவனாக, உண்மையான அவதாரத்தை எடுத்து விட்டார்.

வரலாற்று சிறப்புமிக்க முதற்படியை எடுத்துள்ள நீங்கள், தமிழீழ மக்களின் தற்காலிகப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி அரசியல் நகர்வுகளை ஆரம்பித்து விட்டீர்கள். தமிழர்களுக்கு எதிராக போரை நிறுத்தவும், அவர்களுக்கு உணவும், மருந்தும் போய்ச் சேரவும், வாழும் இடங்களில் அவர்கள் நிம்மதியாய் குடியமரவும், உருப்படியான காரியங்களை செய்யுமாறு, இலங்கை அரசுக்கான அனைத்து இராணுவம் சார் உதவிகளை நிறுத்துமாறும் இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் போட்டிருக்கும் நீங்கள், ஈழத் தமிழ் மக்களுக்கு ஓர் இடைக்கால நிம்மதியை கொடுத்திருக்கிறீர்கள்.

தமிழக மக்களின் குரலும், தமிழகத் தலைவர்களது செயலும், தமிழகத்தின் சக்தியும், தமிழீழ மக்களுக்கு சுதந்திரத்தின் ஒளியை காட்டியிருக்கிறது. `தமிழகம் எமக்காக பொங்கி எழதா?' எமக்கு விடுதலைப்பெற்றுத்தர மாட்டார்களா?' என்று ஏங்கியிருந்த தமிழீழ மக்களுக்கு நம்பிக்கையையும், துணிவையும் தந்திருக்கின்றது.

தமிழர்களை நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் ஏனென்று கேட்க ஆளே இல்லை என்ற இறுமாந்திருந்த சிங்கள பேரினவாதத்திற்கு சினத்தையும், அச்சத்தையும் ஊட்டியிருக்கின்றது. எல்லாவற்றுக்கும் மேலாக, ஈழத் தமிழர்களின் அழிவை, தமது சொந்த நலன்களுக்காக கைகட்டி பார்த்து நிற்கும் அனைத்துலக சமூகத்திற்கும் அதிர்ச்சியளித்திருக்கின்றது.

வரலாற்று மாற்றங்கள் அரங்கேறுகின்றன. நம்புதற்கரிய திருப்பங்கள் நிகழ்கின்றன. ஈழத்தமிழர்களுக்காக தனது நாடாளுமன்ற இருக்கைகளையே பணயம் வைக்கின்றது தமிழகம், நிம்மதி பெருமூச்சுவிட்டு, மகிழ்ச்சிக் கடலில் மூழ்கித் தவிக்கின்றது தமிழீழம். பெருமிதத்தோடும், திமிரோடும் நிமிர்கிறான் தமிழன்.

இப்போது, தமிழீழ மக்களுக்கு ஓர் தற்காலிக நம்மதியை கொடுக்க ஆணித்தரமான முயற்சிகளை எடுத்துள்ள நீங்கள், சிங்கள பேரினவாத ஒடுக்குமுறையிலிருந்து அவர்கள் நிரந்தர விடுதலை பெறவும் ஆவன செய்ய வேண்டும். அவர்களுடைய வீடுகளை ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகளை வெளியேற்றி, அந்த மக்கள் தமது சொந்த ஊர்களுக்கு சென்று நிரந்தரமாக குடியேறி, சுதந்திரமாக வாழ ஆவன செய்ய வேண்டும்.

நீங்கள் எல்லோரும் இப்போது எடுத்துள்ள முயற்சிகள் ஓர் ஆரம்பம் தான் என்பதை நாம் அறிவோம். தமிழீழ மக்களுக்கு நிரந்தரமான விடுதலையை பெற்றுதரும் வரை தமிழகம் ஓயாது என்பதையும் அறிவோம்.

ஒரே இரவில் அதிசங்களை படைக்கும் ஆற்றல் படைத்தவர்கள் நீங்கள், நம்பிக்கையோடு காத்திருக்கின்றது ஈழத்தமிழினம்.

இ‌வ்வாறஅ‌ந்த அ‌றி‌க்கை‌யி‌ல் கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்