ம‌த்‌‌தி‌யிலு‌ம், மா‌‌நில‌த்‌தி‌லு‌ம் ந‌ல்லா‌ட்‌சி அமைய உழை‌ப்போ‌ம்:தொண்டர்களுக்கு ஜெ. வேண்டுகோள்!

வியாழன், 16 அக்டோபர் 2008 (13:49 IST)
37வது ஆ‌ண்டி‌ல் அடியெடு‌த்து வை‌க்கு‌ம் அ.இ.அ.‌தி.மு.க., மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைய, நன்மைகள் பெருகிட, நாளும் உழைக்க உறுதி ஏற்போம்'' எ‌ன்று தொ‌‌ண்ட‌ர்களு‌க்கு அ‌க்க‌ட்‌சி‌யி‌ன் பொது‌ச் செயல‌ர் ஜெயலலிதா வே‌ண்டுகோ‌ள் ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், அ.இ.அ.தி.மு.க. என்ற மக்கள் இயக்கத்தின் வரலாற்றில், 36 ஆண்டுகள் நிறைவு பெற்று, 17.10.2008 அன்று 37ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றோம். அதனை எண்ணி நம் உள்ளமெல்லாம் உவகை. மகிழ்ச்சி. உங்கள் பயன் கருதாத உழைப்பு, தொண்டு ஆகியவை என்றென்றும் பாராட்டத்தக்கவை. அதே போல், இந்த இயக்கம் வலிமை பெற, பொலிவு பெற பல்வேறு தியாகங்களைச் செய்த, உயிர்நீத்த தொ‌ண்ட‌ர்க‌ளி‌ன் அடலேறுகளின் தியாகத்தை நினைத்துப் போற்றுவோம் பாராட்டுவோம்.

இன்று இந்தியத் திருநாட்டில் அச்சமும், வேதனையும், அழுகுரலும், குண்டு வெடிப்புகளும், கோரக் காட்சிகளும் பெருகிவிட்டன. மக்களிடையே அன்பு நிலவாமல் ஒற்றுமைக்கு ஊறு விளைவித்திடும் பயங்கரவாத சக்திகளின் தீயச் செயல்கள் அதிகமாகி விட்டன.

நாட்டின் பொருளாதாரம் படுகுழியில், சட்டம், ஒழுங்கைக் காத்திட முனைப்பு இல்லை. பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினை சக்திகள், பொருளாதார பயங்கரவாதம் ஆகியவை மலிந்துவிட்டன. மக்களோ உளம் நலிந்து காணப்படுகின்றனர். செயல் திறன் அற்ற அரசாக, இந்திய இறையாண்மையை இழந்திடும் போக்கில் செயல்படும் கொள்கையற்ற, சந்தர்ப்பவாதிகளின் கூட்டணி அரசு மத்தியில் உள்ளது. இந்த மைய கூட்டணி அரசை மாற்றிட வேண்டும் என்ற மக்களின் கருத்து மேலோங்கி வருகின்றது.

தமிழ்நாட்டில் மின்சார வெட்டால், ஏழை, எளிய, நடுத்தர மக்கள், விவசாயிகள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், நெசவாளர்கள், மாணவ -மாணவியர், சிறு தொழில் செய்வோர், குறுந்தொழில் செய்வோர், பெருந்தொழில் செய்வோர் என அனைத்துத் தரப்பினரும் அல்லல்பட்டு, ஆற்றாது அழுகின்றனர்.

உங்களுடைய கடின உழைப்பால், கடமை உணர்வால், தியாக உள்ளத்தால் மக்களின் எதிர் பார்ப்புகளை நிறைவேற்ற முனைவேன். உங்களின் உள்ளத்தை, உழைப்பின் ஆற்றலை, பலத்தை, விசுவரூபத்தை உங்கள் சகோதரியாகிய நான் அறிவேன். நாட்டு மக்களும் நன்கு அறிந்து வைத்துள்ளார்கள்.

அ.இ.அ.தி.மு.க. 37வது ஆண்டு துவக்க விழாவினை எழிலுற, சிறப்புற கொண்டாட முனையுங்கள். எங்கெங்கு காணினும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறக்கட்டும். புதிய பொலிவுமிக்க கொடிக் கம்பங்கள் எழட்டும். இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி படுத்தட்டும். இல்லாதவர் களுக்கும், இயலாதவர்களுக்கும் நமது உதவிகள் அமையட்டும்.

அடுத்த ஆண்டு இதே நாளில், கழகத்தின் 38வது ஆண்டு துவக்க விழாவில், கழகத்தின் வெற்றிப் பதாகை "இரட்டை இலை'' செழித்து சிறக்கும். எ‌ன் அன்பு ஆணையை ஏற்று, தீயோரை அகற்ற, தீமையை அழிக்க எழுவீர், விரைவீர்.

மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சி அமைய, நன்மைகள் பெருகிட, நாளும் உழைக்க உறுதி ஏற்போம்'' எ‌ன்று ஜெயல‌லிதா தமது அ‌றி‌க்கை‌யி‌ல் கூ‌றியு‌ள்ளா‌ர்.