இல‌ங்கை‌த் த‌மிழ‌ர்களு‌க்காக 25ஆ‌ம் தே‌தி ஆசிரியர்கள் உண்ணாவிரதம்!

வியாழன், 16 அக்டோபர் 2008 (11:07 IST)
இல‌ங்கை‌தத‌மிழ‌ர்க‌ள் ‌தா‌க்க‌ப்படுவதை ‌நிர‌ந்தரமாக ‌நிறு‌த்‌திவே‌ண்டு‌‌மஎ‌ன்அனை‌த்து‌க்க‌ட்‌சி கோ‌ரி‌க்கைகளஉடனடியாம‌த்‌திஅரசு ‌நிறைவே‌ற்ற‌ககோ‌ரி வரு‌ம் 25ஆ‌மதே‌தி ராமே‌ஸ்வர‌த்த‌ி‌லஉ‌ண்ணா‌விரபோரா‌ட்ட‌மநடைபெறு‌மஎ‌ன்றதமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்ற பொதுச்செயலாளர் மீணாட்சிசுந்தரம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இததொட‌ர்பாஅவ‌ரஇ‌ன்றவெளியிட்டுள்ள அறிக்கையில், ''இலங்கை‌தமிழர்களும், தமிழக மீனவர்களும் தாக்கப்படுவதை நிரந்தரமாக நிறுத்திட இந்திய அரசு 2 வார காலத்திற்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகிட நேரிடும் என்று முடிவெடுத்து அறிவித்துள்ள அனைத்துக்கட்சி தலைவர்களின் இன உணர்வை, எழுச்சிப் பெருக்கை, தியாகத்தன்மையை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நெஞ்சார வரவேற்றுப் பாராட்டுகிறது.

தமிழ்ச் சமுதாயத்தின் ஒரு அங்கமான ஆசிரியப் பெருமக்களின் சார்பாக அனைத்துக்கட்சியின் அதே கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுமாறு மத்திய அரசை வற்புறுத்தி வரு‌ம் 25ஆ‌மதேதி காலை 8 மணிமுதல் மாலை 5 மணி வரை ராமே‌ஸ்வரம் கடற்கரையில் என் தலைமையில் 5 ஆயிரம் ஆசிரியப் பெருமக்கள் எழுச்சியோடு கலந்து கொள்ளும் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடக்கிறது.

இ‌ந்போராட்டத்தில் ஆசிரியர் மன்றம், தமிழ்நாடு அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் இடங்களில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர் கழகம், தமிழகக் கல்விப்பணி அனைத்து ஆசிரியர்கழகம், தமிழ்நாடு வேளாண்மைத் தொழிலாசிரியர் சங்கம், மதுரை மாநகராட்சி அனைத்தாசிரியர் மன்றம் உள்ளிட்டப் பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் இயக்க வேறுபாடின்றி இன உணர்வோடு கலந்து கொள்ளும்'' எ‌ன்று ‌மீனா‌ட்‌சிசு‌ந்தர‌மகூறியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்