ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலக‌த்தை இழு‌த்து பூட்டிய விவசாயிகள்!

செவ்வாய், 14 அக்டோபர் 2008 (13:46 IST)
ஈரோட்டில் உ‌ள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை விவசாய சங்கத்தினரு‌ம், நீர்பாசன சங்கத்தினரு‌ம் திடீரென இழுத்து பூட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ட‌ந்த மாதம் 30ஆம் தேதி ஈரோடு மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புதுறை‌யின‌ர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.7 லட்சத்து 17 ஆயிரத்து 100 தொகை லஞ்ச ஒழிப்புதுறை‌யின‌ர் பறிமுதல் செய்தனர்.

லஞ்சம் பெற்ற அதிகாரிகளை கண்டித்து ஈரோட்டில் அனைத்து விவசாய சங்க‌ம் ம‌ற்று‌ம் நீர்பாசன சங்க‌ம் சார்பில் ஈரோடு மாசு கட்டுப்பாட்டு அலுவலகம் முன் ஆர்‌ப்பாட்டம் நடத்தினர். ஆர்‌ப்பாட்டத்தில் விவசாய பிரதநிதிகள் பேசிக்கொண்டிருந்த போது சில விவசாயிகள் மாசுகட்டுப்பாட்டு அலுவலகத்தின் கதவை திடீரென இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

இதை எதிர்பார்க்காக பாதுகாப்புக்கு நின்றிருந்த காவ‌ல்துறை ஆ‌ய்வாள‌ர் ஆறுமுகம் ஓடிவந்து தடு‌க்க முய‌ன்றா‌ர். அதற்குள் பூட்டுபோட்ட விவசாயி ஒருவ‌ர் சாவியை கீழே கூட்டத்திற்குள் வீசிவிட்டார்.

இதனால் அலுவலகத்திற்குள் இருந்தவர்கள் அலறினர். தகவ‌ல் அ‌றி‌ந்து ஈரோடு மாவ‌ட்ட காவ‌ல்துறை துணை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர் (டி.எஸ்.பி.) நடராஜன் சம்பவ இடத்திற்கு வந்து விவசாயிகளிடம் பே‌ச்சுவா‌ர்‌த்தை நட‌த்‌தினா‌ர். ‌இதை‌யடு‌த்து, பூட்டை திறந்து அலுவலகத்திற்குள் இருந்தவர்க‌ள் மீட்டனர். இந்த சம்பவம் ஈரோடு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

வெப்துனியாவைப் படிக்கவும்