‌சி‌க்ன‌ல் கோளாறு: ‌திரு‌ச்‌சி‌யி‌ல் ர‌யி‌ல் சேவை பா‌தி‌ப்பு!

திங்கள், 13 அக்டோபர் 2008 (12:11 IST)
திரு‌ச்‌சி ர‌‌யி‌ல் ‌நிலைய‌த்து‌க்கு‌ம் ஸ்ரீர‌ங்க‌ம் ர‌யி‌ல் ‌நிலைய‌த்து‌க்கு‌ம் இடையே ஏ‌ற்ப‌ட்ட ‌சி‌க்ன‌ல் கோளாறு காரணமாக ர‌யி‌ல் சேவை பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது.

தொ‌‌ழி‌ல் நு‌ட்ப கோளாறு காரணமாக இ‌ன்று அ‌திகாலை 2.50 ம‌ணி‌க்கு இ‌ந்த பா‌தி‌ப்பு ஏ‌ற்ப‌ட்டதாகவு‌ம், ‌பி‌ன்ன‌ர் கோளாறு ச‌ரி செ‌ய்ய‌ப்‌ப‌ட்டு அ‌திகாலை 4 ம‌ணி‌க்கு ர‌யி‌ல் சேவை தொட‌ங்‌கியதாகவு‌ம் ர‌யி‌ல்வே வ‌ட்டார‌ங்க‌ள் தெ‌ரி‌வி‌த்தன.

இ‌ந்த ‌சி‌க்ன‌ல் கோளாறு காரணமாக ‌திருவ‌ந்தபுர‌த்‌தி‌ல் இரு‌ந்து செ‌ன்னை எழு‌ம்பூ‌ர் வ‌ந்த அன‌ந்தபு‌ரி ‌விரைவு ர‌யி‌ல், ‌திருநெ‌ல்வே‌லி‌யி‌ல் இரு‌ந்து செ‌ன்னை வ‌ந்த நெ‌‌‌ல்லை ‌விரைவு ர‌யி‌ல், செ‌ன்னை எழு‌ம்பூ‌ரி‌ல் இரு‌ந்து ராமே‌ஸ்வர‌ம் செ‌ன்ற சேது ‌விரைவு ர‌யி‌ல், மதுரை பா‌ண்டிய‌ன் ‌விரைவு ர‌யி‌ல் ஆ‌கியவை 20 முத‌ல் 30 ‌நி‌மிட‌ங்க‌ள் தாமதமாக புற‌ப்ப‌ட்டு செ‌ன்றன.

இதேபோ‌ல் பு‌ல்ல‌ம்பாடி ர‌யி‌ல் ‌நிலைய‌த்‌தி‌ல் நே‌ற்று ஏ‌ற்ப‌ட்ட ‌சி‌க்ன‌ல் கோளாறு காரணமாக ர‌யி‌ல் சேவைக‌ள் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்