ஈழ‌த் த‌மிழ‌ர்க‌ள் படுகொலையை க‌ண்டி‌த்து ராமே‌ஸ்வர‌த்‌தி‌ல் 19ஆ‌ம் தே‌தி நடிக‌ர், நடிகைக‌ள் பேர‌ணி!

திங்கள், 13 அக்டோபர் 2008 (09:42 IST)
இலங்கைத் தமிழர் படுகொலையை கண்டித்தும் அவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்தக் கோரியும் தமிழ் திரையுலகினர், ராமேஸ்வரத்தில் 19ஆம் தேதி பேரணி, பொதுக் கூட்டம் நடத்துகின்றனர். இதையட்டி படப்பிடிப்புகள் 3 நாட்கள் ரத்து செய்யப்படுகின்றன.

இலங்கை‌த் தமிழர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவது குறித்து தமிழ் திரையுலகினர் நேற்று பிலிம்சேம்பரில் கூடி ஆலோசித்தனர். தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரை அரங்கு உரிமையாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள் மற்றும் பெப்சி உள்ளிட்ட அனைத்து சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்துக்குப் பின், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் ராம.நாராயணன், இய‌க்குன‌ர் பாரதிராஜா ஆகியோர் செ‌ய்‌தியாள‌ர்க‌ளிட‌ம் கூறுகை‌யி‌ல், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்தும், தமிழர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்த வலியுறுத்தியும், தமிழ் திரையுலகின் சார்பில் போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இ‌ந்த மாதம் 18, 19, 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளும் ரத்து செய்யப்படுகின்றன. திரையுலகினர் ராமேஸ்வரத்தில் 19ஆ‌ம் தேதி திரண்டு பேரணி, பொதுக் கூட்டம் நடத்தி, இலங்கை அரசுக்கு தங்களது எதிர்ப்பை தெரிவிக்க உள்ளனர். இலங்கைத் தமிழர் பிரசசனைக்கு முடிவு வரும் வரை திரையுலகினர் கறுப்பு பேட்ஜ் அணிவது தொடரும்.

முதல்கட்டமாக, தமிழர் பகுதியில் குண்டு வீச்சு தடுத்து நிறுத்தப்பட வேண்டும். போர் நிறுத்தம் அறிவித்து அமைதி திரும்ப உதவ வேண்டும்.

உணவு, உடை மற்றும் மருத்துவ உதவிகளை, பாதிக்கப்பட்ட ஈழ‌த் தமிழர்களுக்கு மத்திய அரசு நேரடியாக உதவ வேண்டும்.

ழ‌த் தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு கொடுத்து வரும் ராணுவ உதவிகளை மத்திய அரசு நிறுத்த வேண்டும்.

தமிழக மீனவர்கள் கடல் எல்லை பகுதியில் தாக்கப்படுவது நிறுத்தப்பட வேண்டும்.

இந்தியா-இலங்கை கூட்டு ரோந்து ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும்.

முறையாக ஒரு தூதுக்குழு அமைத்து, இலங்கையில் நடக்கும் நடவடிக்கைகளை நேரடியாக பார்வையிட்டு மத்திய அரசுக்கும், தமிழக மக்களுக்கும் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் எ‌ன்று அவர்கள் கூறின‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்