செங்கோட்டை, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு ரயில்!

சனி, 11 அக்டோபர் 2008 (11:11 IST)
பயணிகளின் கூட்ட நெரிசலை சமா‌ளி‌ப்பத‌ற்காக சென்னையில் இருந்து செங்கோட்டை, நாகர்கோவில், திருச்சிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக தெ‌‌ற்கு ர‌யி‌ல்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், " பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து செங்கோட்டைக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 8.25 மணிக்கு சிறப்பு ரயில் (வ.எண். 0633) இயக்கப்படுகிறது. மறுமார்க்கம், செங்கோட்டையில் இருந்து சென்னை எழும்பூருக்கு 13ஆ‌ம் தேதி இரவு 8.30 மணிக்கு சிறப்பு ரயில் (0634) இயக்கப்படுகிறது.

அதே போல், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்டிரலுக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கும் (0612), சென்டிரலில் இருந்து நாகர்கோவிலுக்கு 13ஆ‌ம் தேதி மதியம் 2 மணிக்கும் சிறப்பு ரயில் (0611) இயக்கப்படுகிறது.

திருச்சியில் இருந்து சென்னை எழும்பூருக்கு நாளை (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 19ஆ‌ம் தேதி இரவு 8.15 மணிக்கும் (0614), எழும்பூரில் இருந்து திருச்சிக்கு 13, 20ஆ‌ம் தேதியும் இரவு 11.45 மணிக்கும் சிறப்பு ரயில் (0613) இயக்கப்படுகிறது. மேலும், கோவையில் இருந்து சென்டிரலுக்கு 14, 21, 28ஆ‌ம் தேதி 11.45 மணிக்கும், சென்டிரலில் இருந்து கோவைக்கு 15, 22, 29ஆ‌ம் தேதி இரவு 11.45 மணிக்கு மற்றொரு சிறப்பு ரயிலும் இயக்கப்படுகிறது.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது" எ‌ன்று கூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்