நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தர ஊழியர்களுக்கு ஊக்கத் தொகை, பயணப்படி, சம்பளம் ஆகியவற்றை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பாட்டாளி தொழிற்சங்கம் மற்றும் தொ.மு.ச. ஆகிய அமைப்புகள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் என்.எல்.சி. தொழிற்சங்கங்களுடன் இன்று காலை சென்னையில் தொழிலாளர் நலத்துறையினர் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்தனர். இதனால் பாட்டாளி தொழிற் சங்கம் தங்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்வதாக அதன் தலைவர் செல்வராஜ் அறிவித்துள்ளளார்.
இன்று காலை நடைபெறும் பேச்சுவார்த்தையில் எடுக்கப்படும் முடிவைப் பொறுத்து தொழிற்சங்கங்களின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.