ரூ.7,627 கோடி‌யி‌ல் 2 புதிய மின் திட்டங்கள் : கருணாநிதி முன்னிலையில் ஒப்பந்தம்!

வெள்ளி, 10 அக்டோபர் 2008 (14:03 IST)
த‌மிழக‌த்‌தி‌லரூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களஅமை‌க்க முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று ஒப்பந்தம் கையெழு‌த்தானது.

TNG
இது தொட‌ர்பாக தமிழக அரசு இ‌ன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,"தமிழக அரசும், தமி‌ழ்நாடு மின் வாரியமும் மத்திய அரசின் கிராமப்புற மின் வசதிக் கழகத்தின் (Rural Electrification Corporation) நிதியுதவியுடன், வடசென்னை அனல்மின் நிலைய விரிவாக்கம் மற்றும் நெ‌ய்வேலி நிலக்கரி கழகத்துடன் (Neyveli Lignite Corporation) இணைந்து தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவைக்கு நிரந்தரமாக மற்றும் நீண்டகால தீர்வுக்கு வழிவகுக்கும் வகையில் நடப்பு 2008-2009ஆம் ஆண்டில் ரூ.7,627 கோடி செலவில் 1,600 மெகாவாட் மின்உற்பத்தி செ‌ய்யும் 2 புதிய பெரிய மின் திட்டங்களை நிர்மாணித்திடவும், சீரான மின் விநியோகத் திட்டங்களை அமைத்திடவும் ஆவன செ‌ய்து வருகிறது.

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில், தமி‌ழ்நாடு மின்வாரியமும், நெ‌ய்வேலி அனல்மின் நிலையமும், இணைந்து கூட்டுத் துறையில் ரூ.4,909 கோடி மதிப்பீட்டில் ஒவ்வொன்றும் 500 மெகாவாட் வீதம் மொத்தம் 1,000 மெகாவாட் மின்உற்பத்தி செ‌ய்திடும் 2 மின்திட்டங்களை அமைத்திட கிராமப்புற மின்வசதிக் கழகம் ரூ.3,437 கோடி கடனுதவியும்;

வடசென்னை அனல்மின் நிலையத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்தில் தமி‌ழ்நாடு மின்வாரியம் ரூ.2,718 கோடி மதிப்பீட்டில் 600 மெகாவாடமின்உற்பத்தி செ‌ய்திடும் இரண்டாம் பிரிவை அமைத்திட கிராமப்புற மின்வசதிககழகம் ரூ.2,175 கோடி கடனுதவியும்; ஆக மொத்தம் ரூ.5,612 கோடி கடனுதவியை கிராமப்புமின்வசதிக் கழகம், தமி‌ழ்நாடு மின்வாரியத்திற்கு வழங்குகிறது.

இந்த திட்டங்களுக்காக இன்று முதலமைச்சர் கருணா‌நி‌தி முன்னிலையில் நடைபெற்ற ஒப்பந்தத்தில் கிராமப்புற மின்வசதி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் உமாசங்கர், தமிழக மின்வாரியத்தின் தலைவர் மச்சேந்திரநாதன், ெ‌ய்வேலி நிலக்கரி கழகத்தின் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் ஜே.என்.பிரசன்ன குமார் ஆகியோர் கையெழு‌த்‌தி‌ட்டன‌ர்.

இததவிர, ரூ.1,132 கோடி மதிப்பீட்டில் கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 5 மாநகராட்சிப் பகுதிகளில் தற்போது நிலத்திற்கு மேற்புறமாக மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதை மாற்றி நிலத்தின்கீ‌ழ் கேபிள்களைப் பதித்து மின் விநியோகம் செ‌ய்தல்;

ூ.1,078 கோடி மதிப்பீட்டில், கரூர் மாவட்டம் புகளூரிலிருந்து, சென்னைக்கு அருகிலுள்ள கலிவந்தப்பட்டு கிராமம் வரை 325 கி.மீ. நீளத்திற்கு 400 கிலோ வோல்ட் சக்திகொண்ட இரட்டை மின் கடத்தி சாதனங்களை (Double circuit transmission line)அமைத்தல்;

ூ.530 கோடி மதிப்பீட்டில் புதிய துணை மின் நிலையங்கள் அமைத்தல் போன்ற மின் வழங்கும் பணிகளை மேம்படுத்துதல்; ரூ.600 கோடி மதிப்பீட்டில் இதர வசதிகளை ஏற்படுத்துதல் என மொத்தம் ரூ.3,340 கோடி மதிப்பீட்டில் புதிய மின் திட்டங்களால் தயாரிக்கப்படும் மின்சாரத்தைத் தேவைப்படும் இடங்களுக்கு அனுப்புதல் மற்றும் பகிர்ந்து வழங்குதல் ஆகியவற்றுக்கான மிகப்பெரிய திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன.

இந்த திட்டங்களுக்காக, கிராமப்புற மின்வசதிக் கழகம் ஏற்கனவே இந்த ஆண்டில் ரூ.3,113 கோடி கடனுதவி வழங்கியுள்ளது.இது, தமிழக மின்வாரியத்திற்கு கிராமப்புற மின்வசதிக் கழகம் அளித்துள்ள மிகப் பெரிய நிதியுதவியாகும். இந்நிதியுதவியின் மூலமநிறைவேற்றப்படும் புதிய மின்திட்டங்கள் தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையை நிரந்தரமாகவும், நீண்ட காலத்திற்கும் நிறைவு செ‌ய்திடும்.

இத்திட்டங்களின் வாயிலாக 9,000 பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவா‌ய்ப்புகளும் கிடைக்கும்" எ‌ன்றகூ‌ற‌ப்ப‌ட்டு‌ள்ளது.