சுவீடன் நாட்டு விருது பெற்ற தமிழக தம்பதியருக்கு கருணாநிதி பாராட்டு!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (17:38 IST)
நோப‌லப‌ரிசு‌க்கஇணையாசு‌வீட‌னநா‌‌ட்டு ‌விருதபெ‌ற்று‌ள்ள ‌கிரு‌ஷ்ண‌ம்மா‌ள்-ச‌ங்கர‌லி‌ங்க‌மஜெக‌ந்நாத‌னத‌ம்ப‌தியரு‌க்கமுதலமை‌ச்ச‌ரகருணா‌‌நி‌தி பாரா‌ட்டதெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

இதகு‌றி‌த்தத‌மிழஅரசஇ‌ன்றவெளியிட்டுள்ள செய்தி‌க்குறிப்பில், "நோபல் பரிசுக்கு இணையாக, ஸ்வீடன் நாடு வழங்கும் இந்த ஆண்டுக்கான 'வாழ்வுரிமை விருது' நாகை மாவட்டத்தைச் சேர்ந்த கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியருக்கு வழங்கப்படுகிறது என்னும் செவியினிக்கும் செய்தி கேட்டு, நெஞ்சம் மகிழ்ந்து நிறைந்த மனதோடு தம்பதியர் இருவரையும் வாழ்த்துவதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

கிருஷ்ணம்மாள்-ஏழை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த குடும்பத்தில் பிறந்து பல்கலைக்கழகம் வரை பயின்று, காந்தியடிகளின் சர்வோதய இயக்கத்தில் ஈடுபட்டவர். சங்கரலிங்கம் ஜெகந்நாதன் ஒத்துழையாமை இயக்கத்தில் சேர்ந்து, கல்லூரிபபடிப்பை கை விட்டு முழுநேர காந்தீயத் தொண்டராகத் திகழ்ந்தவர். தொண்டால் இணைந்த இருவரும் நாடு சுதந்திரம் பெற்ற பின்னர்தான் திருமணம் என முடிவு செய்து, அதன்படி 1950இ‌ல் திருமணம் செய்து கொண்டவர்கள்.

1953 முதல் 1967 வரை இருவரும் வினோபா பாவேவால் தோற்றுவிக்கப்பட்ட பூதான இயக்கத்தில் முழுமையாக ஈடுபட்டு சிறப்பாக பங்காற்றியுள்ளனர்.

கீழவெண்மணி சம்பவத்திற்குப் பிறகு அங்கு வாழ்ந்த ஆதிதிராவிட மக்களுக்கு குடியிருப்பு மனை கிடைக்காத சூழ்நிலையில், சங்கரலிங்கம் ஜெகந்நாதன் திருவாரூரிலும், தனியார் ஆதிக்கத்தில் இருந்த வலிவலம் கோவில் நிலம் ஏழை எளியவருக்கு கிடைக்க வேண்டுமென்பதற்காக அங்கும் உண்ணாவிரதம் இருந்ததைத் தொடர்ந்து அப்பிரச்சனைகளில் அவர்களுக்கு உதவிய நிகழ்வையும், முந்தைய அ.இ.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் தேங்கிக் கிடந்த கோப்புகளில் ஒன்றாக இருந்த கிருஷ்ணம்மாள், சங்கரலிங்கம் ஜெகந்நாதன் ஆகியோரது அமைப்பு சார்பில் வைக்கப்பட்டிருந்த கோரிக்கையினை ஏற்று, ஏழை ஆதி திராவிடர்களுக்கு வழங்கப்படக்கூடிய 1,014 ஏக்கர் நிலங்களுக்கு பதிவுக் கட்டணத்தில் இருந்து விலக்களித்து ஆணையிட்ட நிகழ்வையும் இவ்வேளையில் நினைவு கூர்கிறேன்.

ஏழை எளியவர்களுக்காகவே பணியாற்றிக்கொண்டிருக்கும் இந்த தம்பதியர் இருவருடைய தியாகத் தொண்டுகளைப் பாராட்டி பல்வேறு அமைப்புகள் ஏற்கனவே பரிசுகளையும், விருதுகளையும் வழங்கியுள்ள நிலையில் தற்போது சுவீடன் நாடு நோபல் பரிசுக்கு இணையான வாழ்வுரிமை விருதினை இவ்விருவருக்கும் வழங்கிப் பெருமைப்படுத்தி உள்ளது.

அண்ணல் காந்தியடிகளின் அடிச்சுவட்டில் ஏழை எளிய ஆதிதிராவிட வகுப்பைச் சார்ந்த மக்களுக்காகக் கடந்த 60 ஆண்டுகளாகத் தொண்டாற்றி விருது பெற்றுப் புகழ் குவித்துள்ள பெருமக்கள் கிருஷ்ணம்மாள்-சங்கரலிங்கம் ஜெகந்நாதன் தம்பதியர் இருவருக்கும் தமிழக அரசின் சார்பில் மனமார்ந்த பாராட்டுகளையும், நல் வாழ்த்துகளையும் தெரிவிப்பதாக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்துள்ளார்" எ‌ன்று கூறப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்