தனியார் வாகன உ‌ரிமையாள‌ர்களு‌க்கு த‌மிழக அரசு எ‌ச்ச‌ரி‌க்கை!

வெள்ளி, 3 அக்டோபர் 2008 (16:52 IST)
வாகனத்தின் பதிவு எண் பலகையில் 'G' அல்லது 'அ' எ‌ன்எழுத்தை எழுதி உள்ள தனியார் மகி‌ழ்வுந்து உரிமையாளர்கள் உடனடியாஅதனை அழித்து விடுமாறும் தண்டனை நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு‌மத‌மிழஅரசகே‌ட்டு‌ககொ‌ண்டு‌ள்ளது.

இது கு‌றி‌த்து த‌மிழக அரசு இ‌ன்று வெ‌ளி‌‌‌யி‌ட்டு‌ள்ள ச‌ெ‌ய்‌தி‌க்‌கு‌றி‌ப்‌பி‌ல், "சில தனியார் மகி‌ழ்வுந்து உரிமையாளர்கள் தங்கள் வாகனத்தின் பதிவு எணபலகையில் 'G' அல்லது 'அ' என்ற எழுத்தை எழுதி உள்ளதும் அதனை பயன்படுத்தி வாகனத்தை போக்குவரத்து விதிகளுக்கு முரணாக பயன்படுத்துவதும் அரசினகவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

மோட்டார் வாகன சட்டம் 1989-ல் பிரிவு 39-ன்படி வாகனத்தின் பதிவு எணசட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி எழுதப்பட வேண்டும். மேற்படி சட்டப் பிரிவு 39-ல் குறிப்பிட்டு இருப்பதற்கு முரணாக வாகனத்தை பயன்படுத்துவது பிரிவு 192-ன் கீ‌ழ் தண்டனைக்குரிகுற்றமாகும்.

இக்குற்றம் முதல் தடவையாக இருப்பின் ரூ.5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம். இரண்டாவது தடவை அல்லது அதற்கு மேலும் இக்குற்றத்திற்கு ஓராண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5,000 முதல் 10,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.

மேற்படி சட்டத்தின் பிரிவு 207-ன்படி பிரிவு 39-ல் கண்டுள்ளதற்கு எதிராக பயன்படுத்தப்படும் வாகனங்களை கைப்பற்றி காவல் நிலையத்தில் நிறுத்தி வைக்கவும் வழிவகை உள்ளது.

எனவே, தங்கள் வாகனத்தின் பதிவு எண் பலகையில் சட்டத்திற்கு புறம்பாக 'G' அல்லது 'அ' எழுத்தை எழுதி உள்ள தனியார் மகி‌ழ்வுந்து உரிமையாளர்கள் உடனடியாஅதனை அழித்து விடுமாறும் தண்டனை நடவடிக்கையினை தவிர்த்திடுமாறு‌ம் கேட்டுககொள்ளப்படுகிறார்கள்" எ‌ன்று கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்