ம‌த்‌திய கூ‌ட்டுறவு வங்கி பணி எழுத்து‌த் தேர்வு முடிவுகளை வெளியிட ஜெ. வ‌லியு‌றுத்த‌ல்!

புதன், 1 அக்டோபர் 2008 (15:16 IST)
மத்திய கூட்டுறவு வங்கி பணி எழுத்து‌த் தேர்வமுடிவுகளை உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், தடையாணை இருக்கும் மூன்று மாவட்டங்க‌ளி‌ல், உயர் நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று அ.இ.அ.தி.மு.க. ஜெயல‌லிதகேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கடந்த 24.9.2008 அன்று தமிழ்நாடு முழுவதும் செயல்பட்டு வரும் 18 மத்திய கூட்டுறவு வங்கிகளில் உள்ள 546 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வு அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்றது.

இதில், வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யப்பட்டோர் அனைவரும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். மேற்படி எழுத்துத் தேர்வின் முடிவுகள் 24.9.2008 அன்று மாலை 6 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வு எழுதிய அனைவருக்கும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேற்படி சூழ்நிலையில், மதுரை, விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தவர்கள் சிலர் தங்களுக்கு எழுத்துத் தேர்வு எழுதுவதற்கான கடிதம் அனுப்பப்படவில்லை என்று தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.

இதனை அடுத்து, சென்னை உயர் நீதிமன்றம் மேற்படி மூன்று மாவட்டங்களில் நடைபெற்ற தேர்வுகளின் முடிவுகளை வெளியிட தடை விதித்தது. மற்ற 15 மாவட்டங்களைப் பொறுத்தவரையில், எந்தவித தடை ஆணையும் இல்லாத போது, விடைத்தாள்கள் திருத்தப்படாமல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக ஏற்கனவே அறிவித்தபடி அன்று மாலை 6 மணிக்குத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

24.9.2008 அன்று கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை செயலர் அனைத்து மத்திய கூட்டுறவு வங்கிகளின் தனி அலுவலர்களை தொடர்பு கொண்டு, விடைத்தாள்களை திருத்த வேண்டாம் என வாய்மொழி உத்தரவு பிறப்பித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. செயலரின் வாய்மொழி உத்தரவிற்கிணங்க விடைத்தாள்கள் திருத்தும் பணி மேற்கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது.

மதுரை, விழுப்புரம், ஈரோடு ஆகிய மாவட்டங்கள் நீங்கலாக, 24.9.2008 அன்று மத்திய கூட்டுறவு வங்கிகளில் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வின் முடிவு ஏன் அன்று மாலை அறிவிக்கப்படவில்லை? இதன் உள்நோக்கம் என்ன? யார் இது போன்ற முறைகேடுகளில் ஈடுபடுகிறார்கள்?

மேலும், மத்திய கூட்டுறவு வங்கிகளில் உள்ள 546 உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக 24.9.2008 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள் ஒளிவு மறைவு இன்றி, நியாயமான முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் முடிவுகள் உடனடி யாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், தடையாணை இருக்கும் மூன்று மாவட்டங்களைப் பொறுத்த வரையில், உயர் நீதிமன்றத்தின் ஆணையைப் பெற்று அதன்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஜெயல‌லிதா கேட்டுக் கொ‌ண்டு‌ள்ளா‌ர்.