ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே யானை மிதித்து தொழிலாளி இறந்தார்.
ஈரோடு மாவட்டம். சத்தியமங்கலம் அடுத்துள்ளது தாளவாடி மலைப்பகுதியில் உள்ளது குமிட்டாபுரம் என்ற கிராமம். இந்த கிராமம் கர்நாடகா மாநிலத்திற்குட்பட்ட பகுதியாகும். இங்குள்ள வனப்பகுதியில் காட்டுயானைகள் கூட்டம், கூட்டமாக திரிகிறது.
இந்த நிலையில் குமிட்டாபுரத்தை சேர்ந்த மல்லிகர்ஜூனா (45) தமிழக வனப்பகுதியில் விறகு பொறுக்க சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த ஒரு யானை மல்லிகர்ஜூனாவை காலால் மிதித்து கொன்றது.