இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஹர்ஷா குழும தொழில் நிறுவனம் தமிழகத்தில் பிள்ளைப்பாக்கம் சிப்காட் தொழிற் பூங்காவில் எண்ணெய் மற்றும் வாயு துரப்பண இயந்திர தொழிற்சாலையையும், திருப்பெரும்புதூர் சிப்காட் உயர் தொழில் நுட்ப சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்தையும், கும்மிடிப்பூண்டி அருகில் கண்ணாடி உற்பத்தித் தொழிற்சாலையையும் இந்திய துணை நிறுவனங்கள் மூலமாக அமைத்திடத் திட்டமிட்டுள்ளது.
மொத்தம் ரூ.1,500 கோடி முதலீட்டில் 1,500 பேருக்கு நேரடியாகவும், மேலும் பலருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்புகளை வழங்கிட வகை செய்யும் இந்தத் தொழிற்சாலைகளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் கருணாநிதி முன்னிலையில் இன்று கையெழுத்தானது.