''
காங்கிரஸ், பா.ஜ. கட்சியுடன் கூட்டணி வைக்காத கட்சியுடன் இணைந்து 3வது அணியை உருவாக்கியே தீருவோம்'' என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலர் என். வரதராஜன் உறுதிப்பட கூறியுள்ளார்.
சென்னையில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் பி.ராமமூர்த்தி நூற்றாண்டு விழாவில் கலந்து கொண்டு, அக்கட்சியின் மாநில செயலர் என்.வரதராஜன் பேசுகையில், 3வது அணி அமைப்பது குறித்து தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துடன் பேசியவுடன் தி.மு.க. அரசு உடனே ஒரு ரூபாய்க்கு அரிசியும், 50 ரூபாய்க்கு மளிகைப் பொருட்களும் வழங்கி உள்ளது என்று குற்றம்சாற்றினார்.
காங்கிரஸ் கட்சியினர் அமைச்சர் பதவி கேட்டதால் தி.மு.க. ஆட்டம் கண்டுள்ளது என்று தெரிவித்த வரதராஜன், காங்கிரஸ், பா.ஜ. கட்சியுடன் கூட்டணி வைக்காத கட்சியுடன் இணைந்து 3வது அணியை உருவாக்கியே தீருவோம் என உறுதிப்பட கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலர் பிரகாஷ்காரத் பேசுகையில், அமெரிக்கா நிதி நெருக்கடியில் உள்ள இந்தநேரத்தில் இந்தியா- அமெரிக்கா அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தம் சாத்தியமில்லை என்று கூறிய அவர், இந்த அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நாங்கள் நிறைவேற்ற விட மாட்டோம் என்று தெரிவித்தார்.