காவ‌ல்துறை ஆளு‌ம் க‌ட்‌சி‌யி‌ன் ஏவ‌ல்துறை: விஜயகாந்த்!

திங்கள், 22 செப்டம்பர் 2008 (16:26 IST)
தமிழ்நாட்டில் காவல்துறை ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக ஆகிவிட்டது எ‌ன்று‌ம் காவல் துறை மக்களின் வரிப்பணத்தில் பெறுகின்ற சம்பளத்தில் சட்டபடியாக இயங்க வேண்டிய ஒரு துறையாக இருக்க வேண்டும் எ‌ன்று‌மே.ு.‌ி.க. தலைவ‌ர் ‌விஜயகா‌ந்‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாஅவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடைபெறும் குற்றங்களில் வேண்டாதவர்களை அரசு சேர்ப்பது ஒரு வகை. திட்டமிட்டு குற்றங்களைத் தாங்களே செய்துவிட்டு அதில் வேண்டாதவர்களை ஈடுபடுத்துவது மற்றொரு வகை. இன்றைய ஆளுங் கட்சியான தி.மு.க. அரசு இந்த 2-வது வகையைச் சேர்ந்தது.

நேற்றைய தினம் (21.9.2008) நகைச்சுவை நடிகர் வடிவேல் வீட்டின் மீது இரு‌ச‌க்கர வாகன‌த்த‌ி‌ல் சிலர் வந்து பட்டப்பகலில் கல்வீசி விட்டு மாயமாய் மறைந்துள்ளனர். முதலில் அவர் வீட்டில் கல் எறிந்ததாகவும் பிறகு அலுவலகத்திற்கு சென்று தாக்கியதாகவும் அவர் கூறுகிறார்.

காவ‌ல் நிலையம் பக்கத்திலேயே அமைந்துள்ள அவர் வீட்டிலிருந்து தகவல் கொடுத்திருந்தால் அந்த வன்முறையாளர்களை அவருடைய அலுவலக‌மபோவதற்குள் பிடித்திருக்க முடியும். இருந்தும் தைரியமாக இத்தகைய வன்முறை செயல்களில் ஈடுபட்ட அந்த குண்டர்கள் தப்பித்து சென்றுள்ளனர்.

இது வெட்டவெளிச்சத்தில் நடத்தப்பட்ட ஆளுங்கட்சியினரின் திட்டமிட்ட செயல் என்றே கருதுகிறேன். அதுவும் தாங்கள் திருச்சியில் இருந்ததாக கூறி தி.மு.க.வினர் மக்களிடமிருந்து தப்பிவிடலாம் என்று இத்தகைய காரியத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு எனது சகோதரியின் கணவர் மறைந்த பொழுது நான் கோவையில் இருந்த நேரத்தில் அன்றைய தினம் நடிகர் வடிவேலுவினால் சச்சரவு ஏற்பட்டது என்பது உண்மை. அது சம்பந்தமாக வழக்கு இன்றும் நடந்து வருகிறது. அப்படியிருக்க அந்த கோபத்தை வைத்து ஓராண்டு கழித்துதான் இத்தகைய செயலில் நாங்கள் ஈடுபட வேண்டுமா அந்த செயலுக்கு ஆத்திரப்பட்டிருந்தால் அப்பொழுதே அல்லவா எங்கள் கட்சித் தோழர்கள் இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பார்கள்.

எங்களின் வளர்ச்சி கண்டு பொறுக்க முடியாத ஆளுங்கட்சியினர் ஏற்கனவே சென்னை மாநகராட்சி தேர்தலில் எத்தகைய வன்முறையை நடத்தி மக்களை ஓட்டு போடவிடாமல் தடுத்து தாங்களே வெற்றி பெற்றதாக வெறியாட்டம் நடத்தினார்களோ, அதே வன்முறையை இப் பொழுதும் சிரிப்பு நடிகர் வடிவேலு மீது காட்டியுள்ளனர்.

இதை சிரிப்பு நடிகர் வடிவேலு புரிந்து கொள்ளாமல் ஆளுங்கட்சி அராஜகத்திற்கு பகடைக்காயாக ஆகியுள்ளார். "ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே'' என்ற பழமொழிக்கேற்ப ஆளுங்கட்சியினர் ஆட்டுவிக்கும் கைப்பொம்மையாக சிரிப்பு நடிகர் வடிவேலு ஆகிவிட்டார் என்பதில் அவர் மீது எனக்கு அனுதாபமே தவிர, ஆத்திரம் இல்லை.

அவர் கூற்றுப்படியே அவரது வீட்டை தாக்கியவர்கள் ஏன் அவரையோ அவரது குடும்பத்தினரையோ காயப்படுத்தாமல் தப்பினார்கள் என்பதும், அவர் சொல்வது போல இன்றைய தினம் நடைபெறும் வழக்கில் அவரை வரவிடாமல் தடுப்பதற்கு இத்தகைய முயற்சி மேற்கொள்ளப்பட்டது என்றால் ஏற்கனவே அவர் ஆஜராகிய பொழுது ஏன் இத்தகைய சம்பவங்கள் நடைபெறவில்லை என்றும் அவர்தான் சிந்தித்துபார்க்க வேண்டும்.

மேலும் ஒரு கட்டத்தில் நீதிமன்றத்திற்கு போகவிடாமல் தடுப்பதற்கு என்று கூறியவர், பின்னர் தன்னை கொலை செய்ய வந்தார்கள் என்று மாற்றியதற்கு பின்னணி என்ன?

தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிடப் போவதாகவும் அதற்கு அரசியல் கட்சிகளின் ஆதரவு கிடைக்கும் என்றும் அவர் கூறியதில் இருந்தே அரசியல் காரணமாகத்தான் இத்தகைய பேட்டி அளித்துள்ளார் என்பதற்கு அதுவே ஒப்புதல் வாக்குமூலம் ஆகும். நடிகர்கள் அரசியல் கட்சிகளுக்கு வருவதோ, அரசியல் கட்சிகளை ஆரம்பிப்பதோ, தேர்த‌லி‌ல் நிற்பதையோ நான் என்றும் எதிர்ப்பவன் அல்ல. நாட்டு மக்கள் நல்லெண்ணத்தைப் பெற்ற எவரும் எந்த பதவிக்கும் வரலாம்.

என்னைப் பொருத்தவரையில் நான் அரசியலுக்கு வந்திருப்பது வெறும் நடிகர் என்பதால் மட்டுமல்ல. கடந்த 25 ஆண்டுகளாக நாட்டு மக்களுக்கு நல்லது செய்து அவர்களின் நன்மதிப்பை பெற்றதாலேயே.

ஆளும் தரப்பினருக்கு என்மீதும், நான் சார்ந்துள்ள இயக்கத்தின் மீதும் பொறாமை தீ பற்றி எரிகிறது என்பதை நான் நன்கு அறிவேன். க‌ட்‌சி‌யி‌ன்‌ வளர்ச்சியை தடுக்கவும், எனக்கு களங்கம் கற்பிக்கவுமே, ஆளும் தரப்பினர் எல்லா வகையான முயற்சிகளிலும் ஈடுபடுவார்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இன்று இந்த வழக்கில் மட்டுமல்ல, நாளை தமிழ்நாட்டில் எந்த வழக்கு வந்தாலும் அதிலும் என்னை சேர்க்க தயங்க மாட்டார்கள்.

என்னை யாரும் மிரட்டி பணிய வைக்க முடியாது. என்னிடமிருந்து எதைப் பறித்தாலும் எனது தைரிய‌த்தை பறிக்க எந்த சக்தியாலும் முடியாது. நான் கடவுளையும், மக்களையும் நம்பி பொது வாழ்க்கையில் ஈடுபட்டுள்ளேன் என்பதை நாடு அறியும்.

என்னை ஆட்சியினர் கைது செய்து சிறைவைத்தால் அதை சந்திக்க நான் என்றும் தயாராக உள்ளேன். தி.மு.க., அ.தி.மு.க.வைப்போல நமது தொண்டர்கள் பேரு‌ந்துகளை கொளுத்துவதோ, ரயில் மறியல் செய்வதோ, பெட்ரோல் குண்டு வீசுவதோ அல்லது இவை போன்ற வன்முறைச் செயல்களில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு எந்த இடையூறும் விளைவிக்க கூடாது. இந்த நாட்டில் ஜனநாயகம் செத்து விட்டது என்பதற்கு கறுப்பு பேட்ஜ் அணியலாம்.

சட்டம், ஒழுங்கு அறவே இல்லை என்பதை நிரூபிக்க மாவட்ட ஆ‌ட்‌சிய‌ர் அலுவலகம் முன்பு அமைதியாக ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட லாம். தமிழ்நாட்டில் உண்ணாவிரதம் மேற்கொள்ளலாம். இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கான முறையான அறிவிப்பை தலைமைக்கழகம் அவ்வப்போது அறிக்கையின் மூலம் வெளியிடும்.

இன்றைய ஆளுங்கட்சிக்கு காவல் துறை துணை போக‌க்கூடாது என்று எச்சரிக்க விரும்புகிறேன். உண்மை உறங்கும்போது பொய்கள் ஊர்வலம் போகும் என்பது பொன்மொழி, உண்மை விழித்திருந்தால் பொய்கள் இருந்த இடம் தெரியாமல் போகும், இன்றைய பொய் வழக்குகள் நாளை வரும் அரசால் முறையாக விசாரிக்கப்பட்டு பொய் வழக்குகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள் ஓய்வு பெறக்கூடிய காவல்துறை அதிகாரியாக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள். காவல்துறை என்பது இங்கிலாந்து நாட்டின் பிரதமராக இருந்த டோனி பிளேயரையே அந்த நாட்டில் விசாரிக்கும் அளவுக்கு சுதந்திரம் பெற்றுள்ளது.

ஆனால் தமிழ்நாட்டில் காவல்துறை ஆளும் கட்சியினரின் ஏவல் துறையாக ஆகிவிட்டது. எங்களைப் பொருத்தவரையில் காவல் துறை மக்களின் வரிப்பணத்தில் பெறுகின்ற சம்பளத்தில் சட்டபடியாக இயங்க வேண்டிய ஒரு துறையாக இருக்க வேண்டும். அந்த வகையில் உண்மை குற்றவாளிகளைக் கண்டுபிடித்து ஆளுங்கட்சியினரின் தோலை உரித்து காட்ட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்" எ‌ன்று ‌விஜயகா‌ந்‌‌தகூ‌றியு‌ள்ளா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்