நுகர்பொருள் வாணிப கிடங்குகளில் டி.கே.எம்-9 ரக நெல் கொள்முதல் செய்யப்படும்: கருணாநிதி!

வியாழன், 18 செப்டம்பர் 2008 (11:31 IST)
விவசா‌யிக‌ளி‌ன் ‌நீ‌ண்ட நா‌ள் கோ‌ரி‌க்கையை ஏ‌ற்று நுக‌ர்பொரு‌ள் வா‌‌ணிப ‌கிட‌ங்குக‌ளி‌ல் டி.கே.எ‌ம்- 9 ரக நெ‌ல் கொ‌ள்முத‌ல் செ‌ய்ய முதலமை‌ச்ச‌ர் கருணா‌நி‌தி உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக த‌மிழக அரசு வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌‌ப்‌பி‌ல், ''காவிரி டெல்டா பாசன பகுதிகளில் சாகுபடி செய்யப்படும் நெல் ரகங்களில் ஒன்றான டி.கே.எம்.- 9 பொது ரக நெல்லையும் அரசு நெல்கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய வேண்டும் என பல்வேறு விவசாய சங்கங்களும், விவசாயிகளும் வலியுறுத்தி வந்தனர்.

தமிழ்நாட்டில் டி.கே.எம்-9 ரக நெல் கொள்முதல் செய்வது சில வருடங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. எனினும், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, அவர்களது நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையுடன் மாநில அரசு வழங்கும் கூடுதல் ஊக்கத்தொகை முழுவதுமாக கிடைத்திடும் வகையிலும், டி.கே.எம்-9 ரக நெல்லை உடனடியாக நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்ய முதலமைச்சர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.

இதன்மூலம் விவசாயிகள் பயிரிடும் அனைத்து ரக நெல்லும் அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் என்றும், விவசாயிகள் இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டுமென்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்'' எ‌ன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்