இலவச பா‌ஸ் பய‌‌ன்படு‌த்தி மாணவ‌ர்க‌ள் சொகுசு பேரு‌ந்‌திலு‌ம் பய‌ணி‌க்கலா‌ம்!

வெள்ளி, 12 செப்டம்பர் 2008 (14:20 IST)
1ஆ‌ம் வகு‌ப்பு முதல் பிளஸ் 2 வரை ப‌யிலு‌ம் மாணவ, மாணவிக‌ள் இலவச பஸ் பாஸ்-ஐ‌ பய‌ன்படு‌த்‌தி இ‌னிமே‌ல் சொகுசு பேரு‌ந்‌தி‌லு‌ம் இலவசமாக பயணம் செய்யலாம் எ‌ன்று சென்னை மாநகர போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் எம்.ராமசுப்பிரமணியன் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

செ‌ன்னை‌யி‌லசெ‌ய்‌தியாள‌ர்களு‌க்கபே‌ட்டிய‌ளி‌த்அவ‌ர், பய‌‌ணிக‌ளி‌ன் வச‌தி‌க்காக ‌பு‌திதாக மாநகர பேரு‌ந்துக‌ளி‌ல் அடுத்த பேரு‌ந்து நிறுத்தம் வரும் முன்னதாகவே அந்த பேரு‌ந்து நிறுத்தத்தின் பெயரைச்சொல்லி தானாக அறிவிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பு‌திய வசதி முதல் முதலாக சென்னை பிராட்வே பேரு‌ந்து நிலையத்தில் இருந்து தாம்பரம் செல்லும் பேரு‌ந்‌தி‌ல் அறிமுகப்படுத்தப்பட்டு‌ள்ளது.

அடுத்து எந்த பேரு‌ந்து நிறுத்தம் வருகிறதோ அந்த நிறுத்தம் வருவதற்கு 40 அடி தூரத்திற்கு முன்பே அந்த பேரு‌ந்து ‌நிறு‌த்த‌த்‌தி‌ன் பெய‌ர் ஒ‌லி‌‌க்‌கிறது. ‌பிரா‌ட்வே எ‌ன்றா‌ல் அது வரும் முன்பே அடுத்த நிறுத்தம் ‌பிரா‌ட்வே என்று அறிவிக்கிறது. அதுமட்டுமல்ல நிறுத்தம் வந்த பிறகும் அறிவிக்கிறது.

மேலு‌ம் பேரு‌ந்து எந்த மார்க்கமாக செல்கிறது என்பதை காட்டும் வரைபடம் பேரு‌ந்‌தி‌ன் உள்ளே இருபுறங்களிலும் தமிழ், ஆங்கிலத்தில் நிரந்தரமாக வரையப்பட்டுள்ளது. இத‌ற்கு பய‌ணி‌க‌ள் ம‌த்‌தி‌யி‌ல் வர‌வே‌ற்பு இரு‌ந்தா‌ல் தொட‌ர்‌ந்து அனைத்து பேரு‌ந்துக‌ளிலு‌ம் இ‌ந்த வச‌தி செ‌ய்ய‌ப்படு‌ம்.

1-வது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ப‌யிலு‌ம் ப‌ள்‌ளி‌க்கூட மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. அந்த மாணவர்கள் இனிமேல் சொகுசு பேரு‌ந்துக‌ளிலு‌ம் இலவசமாக பயணம் செய்யலாம்.

பயணிகள் மாநகர பேரு‌ந்துகளின் குறைபாடுகள், ஓ‌ட்டுன‌ர், நட‌‌த்துன‌ர் ஆகியோரால் ஏற்படும் குறைபாடுகள் எதுவும் இருந்தால் அந்த குறைகளை 9383337639 என்ற தொலைபே‌சி எ‌ண்‌ணி‌ல் தொட‌ர்பு கொ‌ண்டு தெரிவிக்கலாம். இதற்காக புகார் செய்யப்படும் போன் எ‌ண் ஒவ்வொரு பேரு‌ந்‌தி‌ன் உள்புறத்திலு‌ம் எழுதப்பட்டுள்ளது எ‌ன்று கூ‌றினா‌ர்.

வெப்துனியாவைப் படிக்கவும்