சென்னையில் குறிப்பிட்ட இடங்களில் மின்தடை நேரத்தை தமிழ்நாடு மின்சார வாரியம் மாற்றி அமைத்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், தரமணி, துரைப்பாக்கம், திருவொற்றியூர் மற்றும் மாத்தூத்தில் மதியம் 12 முதல் பிற்பகல் 2 மணி வரையாக இருந்து வந்த மின்தடை, இனி காலை 8 முதல் 10 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
புழலில் பிற்பகல் 2 முதல் மாலை 4 மணி வரை இருந்த வந்த மின் தடை, இனி காலை 10 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
அய்யப்பாக்கம், காலடிப்பேட்டையில் மாலை 4 முதல் 6 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 10 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
சிந்தாதிரிப்பேட்டை, புதுப்பேட்டை மற்றும் எழும்பூர் ஆகியவற்றின் ஒருபகுதியில் மாலை 4.30 முதல் 6 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 10.30 முதல் மதியம் 12 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
அண்ணா நகரில் காலை 6 முதல் 7.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
கீழ்ப்பாக்கத்தில் காலை 6 முதல் 7.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
பாடியில் மதியம் 12 முதல் பிற்பகல் 1.30 மணி வரை இருந்து வந்த மின்தடை, இனி மாலை 4.30 முதல் 6 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
திருமங்கலத்தில் மாலை 4.30 முதல் 6 மணி வரையாக இருந்த மின்தடை, மதியம் 12 முதல் பிற்பகல் 1.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
நொளம்பூரில் காலை 8 முதல் 10 மணி வரையும், மாலை 6 முதல் இரவு 7 மணி வரையும் இருந்து வந்த மின்தடை, இனி காலை 9 முதல் 10.30 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.
ஆலந்தூர், ஆதம்பாக்கம், டி.ஜி.நகர் மற்றும் மடுவங்கரையில் மாலை 6 மணிமுதல் 7 மணி வரை இருந்த மின் வெட்டு, இரவு 7 மணி முதல் 8 மணி வரையாக மாற்றப்பட்டுள்ளது.