போலி மதச் சார்பின்மையையும் கருத்து சுதந்திரம் என்றால் அது மற்ற மதங்களுக்கு என்பதும், தன் மதம் என்று வரும்போது சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது'' பா.ஜ.க மாநில தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''ஒரு கருத்து கணிப்பை வெளியிட்டதற்கு மதுரை தினகரன் அலுவலகம் சூறையாடப்பட்டது போல் இன்று கருத்து படத்தை வெளியிட்டதற்கு வேலூர் தினமலர் அலுவலகம் தாக்கப்பட்டிருப்பது பத்திரிகை சுதந்திரத்தையும், கருத்து சுதந்திரத்தையும் கேள்வி குறியாக்கிக் கொண்டிருக்கிறது.
ஓவியர் ஹுசைன் இந்து கடவுள்களை மிக கேலியாக சித்தரித்த போது கருத்து சுதந்திரம் என்றவர்கள் இன்று இப்படி நடந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் போலி மதச் சார்பின்மையையும் கருத்து சுதந்திரம் என்றால் அது மற்ற மதங்களுக்கு என்பதும், தன் மதம் என்று வரும்போது சகிப்புத்தன்மை இல்லாமல் நடந்து கொண்டது கண்டிக்கத்தக்கது'' என்று இல.கணேசன் கூறியுள்ளார்.