சென்னை பல்லாவரத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுக்கு வந்த வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
சென்னை பல்லாவரம் நாகர்கேணி பகுதியில் ஹோலி குயின் மெட்ரிக்குலேஷன் பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு இன்று காலை மர்ம தொலைபேசி அழைப்பு ஒன்று வந்துள்ளது.
அப்போது, உங்கள் பள்ளிக்கு வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. சிறிது நேரத்தில் வெடித்து விடும் என்று கூறிவிட்டு போனை அந்த மர்ம நபர் துண்டித்து விட்டார்.
இந்த தகவல் அந்த பகுதிகளில் பரவியதைத் தொடர்ந்து தெரசா பள்ளிக் கூடம், ஜெபாஸ்டியன் பள்ளி, கவிதா மெட்ரிக் அனகாபுத்தூர் அரசினர் மேல் நிலைப்பள்ளி, குரோம் பேட்டை அரசு பள்ளி என 15க்கும் மேற்பட்ட பள்ளிகளை முற்றுகையிட்டதால் அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டது.
உடனடியாக இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து காவல் துறையினர் மோப்ப நாய்கள், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து சோதனை நடத்தினர். சோதனையில் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் இது வெறும் புரளி என்று தெரியவந்தது.
இந்த வெடிகுண்டு புரளியால் அந்த பகுதிகளில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபர் யார் என்பதை கண்டுபிடிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.