நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் சிறப்பு சேர்க்க‌ட்டு‌ம்: ப‌ர்னாலா ஆசிரியர் தின வாழ்த்து!

வியாழன், 4 செப்டம்பர் 2008 (15:13 IST)
"ஆசிரியர்க‌ளி‌ன் சேவை நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் சிறப்பு சேர்க்க எனது வாழ்த்துக்கள்" எ‌ன்று ஆளுந‌ர் சு‌ர்‌‌ஜி‌த் ‌சி‌ங் ப‌ர்னாலா கூ‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள வாழ்த்து‌ச் செய்தியில், "டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்தியாவின் சிறந்த குடிமகனாக விளங்கிய அவர் சிறந்த தத்துவமேதை. ஆசிரியர் சமுதாயத்தின் வழிகாட்டி. கல்வி தரத்தை உயர்த்தும் வகையில் ஆசிரியர்கள் கடமையாற்றவேண்டும்.

மாணவர்களுக்கு வழியாட்டியாகவும், எதிர்கால இளைய சமுதாயத்துக்கு எடுத்து‌க்காட்டாகவும், ஆசிரியர்கள் விளங்க வேண்டும் ஆசிரியர் பெருமக்களின் சேவை நாட்டுக்கும் சமுதாயத்துக்கும் சிறப்பு சேர்க்க எனது வாழ்த்துக்கள்" எ‌ன்று பர்னாலா கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்