ஜவுளி உற்பத்தி பாதி‌ப்பை க‌ண்டி‌த்து கரூரில் நாளை ஆர்ப்பாட்டம்: ஜெயலலிதா!

வியாழன், 4 செப்டம்பர் 2008 (09:59 IST)
மின்வெட்டினால் ஜவுளி உற்பத்தி பாதிக்கப்படுவதை கண்டித்தகரூரிலநாளை அ.இ.‌அ.‌தி.மு.க சா‌ர்‌பி‌ல் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அ‌க்க‌‌ட்‌சி‌யி‌ன் பொது‌‌ச் செயல‌ர் ஜெயலலிதா தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொடர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், கரூர் மாவட்டத்தில் மட்டும் எட்டு நூற்பாலைகளும், 3,000 கொசுவலை உற்பத்தி செய்யும் தறிகளும், 75 கொசுவலை நூல் உற்பத்தி செய்யும் இயந்திரங்களும், 1200-க்கும் மேற்பட்ட ஜவுளி நிறுவனங்களும், 30 பேரு‌ந்து பாடி கட்டும் நிறுவனங்களும், 1000‌க்கும் மேற்பட்ட விசைத்தறிகளும் உள்ளன. இதில் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

மேலும் விவசாயிகள் அமராவதி மற்றும் காவிரி பாசனத்தை நம்பியும், நிலத்தடி நீரை நம்பியும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் நெல், கரும்பு, வாழை, தென்னை போன்ற பயிர்களை செய்து வருகின்றனர்.

தற்போது நிலவும் கடுமையான மின்வெட்டின் விளைவாகவும், கட்டுக்கடங்காத நூல் விலை உயர்வு காரணமாகவும், 3,000 கோடி ரூபாய் அளவுக்கு இருந்த ஜவுளி ஏற்றுமதி 1,800 கோடி ரூபாய் என்ற அளவில் குறைந்துவிட்டது. இதன் காரணமாக 50,000‌்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்துள்ளனர். அடிக்கடி நிலவும் மின்வெட்டு காரணமாக மின்மோட்டார்கள் பழுதடைந்து, விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

கரூர் மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தியை பாதிக்கக் கூடிய, லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழக்கக் கூடிய, தொழில் மற்றும் விவசாய உற்பத்தியை பாதிக்கக் கூடிய மின்சாரவெட்டினை ஏற்படுத்தியுள்ள தி.மு.க. அரசை கண்டித்து கரூர் மாவட்ட அ.இ.அ.தி.மு.க. சார்பில் நாளை காலை 10 மணி‌க்கு கரூர்-கோவை சாலை‌யி‌ல் அமைந்துள்ள மின்சாரவாரிய அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன போராட்டம் நடைபெறும்'' எ‌ன்று ஜெயல‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.