சோனியா கா‌ந்‌தி இன்று த‌‌மிழக‌‌ம் வருகை: ஈரோடு பொது‌க்கூ‌ட்ட‌த்‌தி‌ல் பேசு‌கிறா‌ர்!

வியாழன், 4 செப்டம்பர் 2008 (09:59 IST)
கா‌ங்‌‌கிர‌‌ஸ் தலைவ‌ர் சோ‌னியா கா‌ந்‌தி இ‌ன்று த‌மிழக‌ம் வரு‌கிறா‌ர். இவ‌ர் ஈரோட்டில் இ‌ன்று நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

PTI PhotoFILE
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியாகாந்தி தமிழக‌த்‌தி‌ல் இர‌ண்டு நா‌ள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இன்று, ஈரோட்டில் நடைபெறும் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

இதற்காக டெல்லியில் இருந்து விமானம் மூலம் இ‌ன்று கோவை வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஈரோடு வ.உ.சி.பூங்கா மைதானத்தில் வந்து இறங்குகிறார். அவருக்கு கா‌ங்‌கிர‌‌ஸ் ‌பிரமுக‌ர்க‌ள் வரவேற்பு கொடுக்கிறார்கள். அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் சிக்கய்யநாயக்கர் கல்லூரி மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடைக்கு வருகிறார்.

பி‌ற்பக‌ல் 3 ம‌‌ணி‌க்கு சோனியாகாந்தி பேசுகிறார். கூட்டத்துக்கு தமிழ்நாடு காங்கிரஸ் க‌ட்‌சி‌த் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்குகிறார். சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் சுதர்சனம் முன்னிலை வகிக்கிறார்.

மத்திய அமை‌ச்ச‌ர்க‌ள் ப.சிதம்பரம், ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர் பேசுகிறார்கள். விழாவில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி பொதுச்செயலர்கள் வயலார் ரவி, அருண்குமார், கிருஷ்ணமூர்த்தி, மத்திய அமை‌ச்ச‌ர் மணிசங்கர் அய்யர், காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் உள்பட நாடாளும‌ன்ற, ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள் கலந்து கொள்கிறார்கள்.

கூட்டம் முடிந்ததும் ஹெலிகாப்டர் மூலம் சோ‌னியா கா‌ந்‌தி ோவை செ‌‌ல்‌கிறா‌ர். அ‌ங்‌கிரு‌ந்து தனிவிமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார்.

இரவு ஆளுந‌ர் மாளிகையில் தங்கும் அவர் நாளை சென்னை பல்கலைக்கழக 150-வது ஆண்டு விழாவில் கலந்து கொள்கிறார். இந்த விழாவில் பிரதமர் மன்மோகன்சிங், சோனியாகாந்தி, தமிழக முதலமைச்சர் கருணாநிதி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

பின்னர் மாலையில் சேலத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த இரும்பு உருக்காலை விரிவாக்கப்பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவிலும் ‌பிரதம‌ர் ம‌ன்மோக‌ன் ‌சி‌ங், சோனியாகாந்தி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.

சோனியா வருகையையொட்டி 1000‌க்கு‌ம் மேற்பட்ட காவ‌ல‌ர்க‌ள் பணியில் ஈடுபட்டு உள்ளன‌ர்.