த‌மிழக‌த்‌தி‌ல் ‌ஒரு நாளை‌க்கு 20 ம‌ணி நேர‌ம் மி‌ன்வெ‌ட்டு : ஜெயலலிதா!

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (14:57 IST)
''தற்போது தமிழக‌த்த‌ி‌ல் 'அறிவிக்கப்பட்ட மின் வெட்டு', 'அறிவிக்கப்படாத மின்வெட்டு' என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது'' எ‌ன்று அ.இ.அ.‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் ஜெயல‌லிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌‌றியு‌‌ள்ளா‌ர்.

webdunia photoWD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெள‌ி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''இரண்டு வருடங்களுக்கு முன்பே தமிழ் நாட்டில் நிலவும் மின்சாரத்தட்டுப்பாட்டை நான் சுட்டிக்காட்டிய போது, முதலில் இல்லை என்று மறுத்த ஆற்காடு வீராசாமி, பின்னர் மின்சாரத் தட்டுப்பாடு இல்லை; மின்சார வெட்டு தான் இருக்கிறது என்றார்.

சிலநாட்கள் கழித்து மின் சாரப்பற்றாக்குறை இருப்பதை ஒப்புக்கொண்டு, தொழிற் சாலைகளுக்கு மின்சார விடுமுறையை அறிவித்தார். பின்னர் இதை வீடுகளுக்கும் விரிவுபடுத்தினார். இது போதாது என்று தற்போது மேலும் சில கட்டுப்பாடுகளை விதித்து பொதுமக்களுக்கு தமிழக அரசால் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

தற்போது தமிழ் நாட்டில் 'அறிவிக்கப்பட்ட மின் வெட்டு', 'அறிவிக்கப்படாத மின்வெட்டு' என கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 20 மணி நேர மின்வெட்டு அமலில் உள்ளது.

எனது ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட முன் எச்சரிக்கை நடவடிக்கையும், நிர்வாகத் திறமையுமே தான் இதற்குக் காரணம். எனது ஆட்சிக்காலத்தின் முதல் மூன்று ஆண்டுகளை ஒப்பிடுகையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நல்ல மழை பெய்தது என்றே சொல்லலாம். இருப்பினும், இந்த ஆட்சியாளர்களால் தங்கு தடையின்றி சீரான மின்சாரத்தை வழங்க முடிய வில்லை.

இதனால் ஏழை, எளிய, நடுத்தர மக்கள், வியாபாரிகள், மாணவ- மாண வியர் என தமிழகத்தின் அனைத்துத் தரப்பு மக்களும் பாதிக்கப்படுவதோடு, விவசாய உற்பத்தி, தொழில் வளர்ச்சி ஆகியனவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

மக்களுக்குத் தேவையான மின்சாரத்தை எங்கிருந்தாவது வாங்கி அதை மக்க ளுக்கு விநியோகிக்க வேண் டியது ஒரு மாநில அரசின் கடமையாகும். ரு நாளைக்கு 8 மணி நேரம் மின்சார வெட்டு என்று அறிவிக்கப்பட்டாலும், அறிவிக்கப்படாமல் மேலும் 8 மணி நேரத்திற்கு மின்சார வெட்டு நீட்டிக்கப்படுகிறது. அதாவது, இரட்டிப்பு மின்சார வெட்டு அனைத்துப் பகுதிகளிலும் நிலவு கிறது. குறுகிய நேரம் வரும் மின்சாரமும் சீராக இருப்ப தில்லை.

இதன் விளைவாக வீடுகளில் பயன்படுத்தப்படும் மின் சாதனப்பொருட்களான மாவரைக்கும் இயந்திரம், தொலைக்காட்சிப் பெட்டி, குளிர் சாதனப் பெட்டி, விவசாயத்திற்கு உபயோகப் படுத்தப்படும் மின் மோட்டார் சாதனங்கள் ஆகியவை பழுதடைகின்றன. தனால் ஏழை, எளிய, நடுத்தர மற்றும் விவசாயப் பெருமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்'' எ‌ன்று ஜெயல‌‌லிதா கூ‌றியு‌ள்ளா‌ர்.