அரிசி விலை குறைப்பு ஏமாற்றும் வேலை: வைகோ!

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (14:46 IST)
நியாய‌விலை‌க்கடைக‌ளி‌ல் ஒரு ரூபா‌ய்‌க்கு ஒரு ‌கிலோ அ‌ரி‌சி வழ‌ங்க‌‌ப்படு‌ம் எ‌ன்று த‌மிழக அரசு அ‌றி‌வி‌த்து‌ள்ளது ம‌க்களை ஏமா‌ற்று‌ம் வேலை எ‌‌ன்று ம.‌‌தி.மு.க. பொது‌ச் செயல‌ர் வைகோ கு‌ற்ற‌‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoWD
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், தற்போது ‌நியாய‌விலை‌க் கடைகளில் விநியோகிக்கப்படும் அரிசி விலையை இரண்டு ரூபாயில் இருந்து ஒரு ரூபாயாக குறைத்திடும் அறிவிப்பு ஒன்றை முதலமைச்சர் வெளியிட்டுள்ளார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாதம் ஒன்றுக்கு ரூ.500-க்கு மளிகைப் பொருட்கள் வாங்கிய ஏழைக் குடும்பத்தினர் இன்றைக்கு அதே பொருட்களை 2500 ரூபாய்க்கு வாங்க வேண்டிய அளவிற்கு விலைவாசி விஷம்போல் ஏறியுள்ளது. சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலை பன் மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளது.

ஏழை, நடுத்தரக் குடும்பங்களின் வீடு கட்டும் கனவு தகர்க்கப்பட்டு கம்பி, சிமெண்ட் விலை நினைத்துப் பார்க்க முடியாத வண்ணம் உயர்த்தப்பட்டு உள்ளது. எல்.எஸ்.எஸ்., டி.எஸ்.எஸ்., எஸ்.எஸ்.எஸ். என்ற பெயரில் அரசு பேரு‌ந்துக‌ளி‌ன் கட்டணம் முன்னறிவிப்பு இன்றி உயர்த்தப்பட்டு உள்ளது. மின்சார தட்டுப்பாடும் மக்களை பாதிப்படைய செய்துள்ளது.

ஏழை- நடுத்தர மக்களை விலைவாசி உயர்வால் ஏங்க வைத்து விட்டு, தற்போது வெளியிடப்பட்ட அறிவிப்பு ஏமாற்று வேலையாகும். இதனால் மக்களின் கோபத்தில் இருந்து தப்ப முடியாது'' எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.