செ‌ன்னை: மாரத்தா‌ன் போ‌ட்டி‌யி‌ல் கல‌ந்து கொ‌ண்ட மாணவர் மரணம்!

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (16:08 IST)
செ‌ன்னை‌யி‌லஇ‌ன்றநட‌ந்த மாரத்தா‌னபோ‌ட்டி‌யி‌லகல‌ந்தகொ‌ண்மாணவ‌ரஒருவ‌ரமாரடை‌ப்பஏ‌ற்ப‌ட்டமரண‌மஅடை‌ந்தா‌ர்.

சென்னை மெ‌ரீனா‌வில‌இன்று நட‌ந்மாரத்தான் போட்டி‌யி‌லஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓரம்பள்ளியை சேர்ந்த சந்தோஷ் (22) எ‌ன்பவரு‌மகல‌ந்தகொ‌ண்டா‌ர். இவ‌ரஅண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி. இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். செ‌ன்னஐஸ் அவுசில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தார்.

இவர் இன்று நடைபெற்ற 21 கி.மீ. மாரத்தான் போட்டியில் ப‌ங்கேற்றார். இதில் பங்கேற்ற சந்தோஷ் குமார் காந்தி சிலை அருகே மாரத்தான் போட்டி முடியும் தருவாயில் இருந்தபோது திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக அங்கிருந்த மரு‌த்துவ‌ர்க‌ளஅவருக்கு சிகிச்சை அளித்தனர். பின்னர் அடையாறில் உள்ள தனியார் மரு‌த்துவமனை‌க்ககொ‌ண்டசெ‌ன்றன‌ர். அவரை பரிசோதித்த மரு‌த்துவ‌ர்க‌ளமாணவ‌ரசந்தோஷ்குமார் ஏ‌ற்கனவஇறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இது குறித்து தகவல் அ‌றி‌ந்தது‌மமெரீனா காவ‌ல்துறை‌யின‌ரவிரைந்து சென்று விசாரணை நடத்தினர். மாரடைப்பு ஏற்பட்டு இவர் இறந்திருக்கலாம் என்று காவ‌ல்துறை‌யின‌ரதெரிவித்தனர்.

இத‌னிடையே மரண‌ம் அடை‌ந்த மாணவர் குடும்பத்திற்கு 'கிவ் லைவ்' அமைப்பு சார்பில் ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்று கவிஞர் கனிமொழி அறிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்