ஆ‌ற்காடு ‌வீராசா‌மியை மா‌ற்ற வே‌ண்டு‌ம்: ராமதா‌‌ஸ்!

ஞாயிறு, 31 ஆகஸ்ட் 2008 (11:25 IST)
''த‌மிழக‌ம் இரு‌ளி‌ல் மூ‌ழ்குவதை தடு‌க்க ‌‌மி‌ன்துறை அமை‌ச்ச‌ர் ஆ‌ற்காடு ‌வீராசா‌மியை மா‌ற்ற வே‌ண்டு‌ம்'' எ‌ன்று பா.ம.க. ‌நிறுவன‌ர் ராமதா‌ஸ் கோ‌ரி‌க்கை ‌விடு‌த்து‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் வெளியிட்டு‌ள்ள அறிக்கை‌யி‌ல், ''அனைத்து தரப்பினருக்கும் தங்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டிய மாநில அரசு, மின் தட்டுப்பாட்டுக்கும் மின் தடைக்கும் என்ன காரணம் என்று விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கிறது. மின் விநியோகத்தில் கட்டுப்பாடுகளை விதிப்பது தவிர்க்க முடியாதது எனக் கூறி மின்சாரத் துறையின் படுதோல்வியை மறைக்க அரசு முயன்று கொண்டிருக்கிறது.

ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட கால அளவுக்கு மின் சக்தியை திட்டமிட்டு வழங்கி வந்தால் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்காமல் நிலையை சமாளிக்க முடியும்.

ஆனால், அப்படி முறையாக செயல்படுத்தாததால் செல்வாக்கு மிக்கவர்கள் குறுக்கு வழியில் கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி உயர் அழுத்த மின் சக்தியை முறைகேடாக பயன்படுத்தி ஒட்டுமொத்த தமிழகத்தையே இருளில் மூழ்கடித்து வருகிறார்கள் என்றும், இந்த முறைகேட்டை தடுக்க முடியாதபடி அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இதற்கெல்லாம் என்ன காரணம்? யார் காரணம்? என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. நாளன்றுக்கு 10 முதல் 20 மணி நேரம் மின்சாரம் இல்லாததால் கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இந்த நிலை நீடித்தால், வரும் தீபாவளி தமிழக மக்களுக்கு இருட்டு தீபாவளியாகத்தான் இருக்கும் என்று அஞ்சப்படுகிறது. நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிக் கொண்டிருக்கிறது.

புதிய அறிவிப்புகளால் இந்த நெருக்கடியில் இருந்தும் அரசின் தோல்வியில் இருந்தும் மக்களின் கவனத்தை திசை திருப்பி விட முடியும் என்று கருதி விடாமல், மின் ஆளுமையில் திறமையும், இந்த துறையில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துகிற ஒருவரை மின் துறை அமைச்சராக நியமித்து அதன் மூலம் தமிழகம் இருளில் மூழ்கிவிடாமல் தடுக்கவும் முதல்வர் முன்வரவேண்டும்'' எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.