ஒரிசா ‌நிக‌ழ்வு மத ந‌ல்‌லிண‌க்க‌த்த‌ி‌ற்கு பெரு‌ம் சவா‌ல் : த‌ங்கபாலு!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (15:06 IST)
ஒ‌ரிசா‌வி‌ல் ‌கி‌றி‌ஸ்தவ ம‌க்க‌ள் ‌மீதான தா‌க்குத‌ல், இ‌ந்‌தியா‌வி‌ன் அடி‌ப்படை இறையா‌ண்மையான மத ந‌ல்ல‌ிண‌க்க‌த்‌தி‌ற்கு இடை‌‌விடாது ‌விடு‌வி‌க்க‌ப்படு‌கிற பெரு‌ம் சவாலாகு‌ம் எ‌ன்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.‌வி.தங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''ஒரிசாவில் கிறிஸ்தவ மக்கள் மீதான வெறித்தன தாக்குதல் தொடர்ந்து நடை பெற்று வருவது மிகுந்த கண்ட னத்திற்குரியது மட்டுமல்ல. இந்தியாவின் அடிப்படை இறையாண்மையான மத நல்லிணக்கத்திற்கு இடை விடாது விடுவிக்கப்படுகிற பெரும் சவாலாகும்.

அங்கு 12 கிறிஸ்தவர்கள் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். 500 பேருக்கு மேல் தாக்கப்பட்டுள்ளனர். ஏராளமான தேவாலயங்கள், கிறிஸ்தவ கல்வி நிறுவனங்கள் இடிக்கப்பட்டுள்ளன.

ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள் மீது மதவாதிகளின் உச்சகட்ட வெறித் தாக்குதலைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 4,000 கிறிஸ்தவ தேவாலயங்கள் மூடப்பட்டன. பேராயர்களும், போதகர்களும், கன்னியாஸ்திரிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து செப்டம்பர் 7ஆ‌ம் தேதி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை எதிரே உண்ணா நோன்பு நடத்தப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த பேராயர்களும், ஏராளமான கிறிஸ்தவ மக்களும் கலந்து கொள்ளும் அந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் நானும் கலந்து கொள்கிறேன்'' எ‌ன்று த‌ங்கபாலு கூ‌றியு‌ள்ளா‌ர்.