கிறிஸ்தவர்கள் மீது தாக்குத‌ல்: ஒரிசா அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்! ராமதாஸ்

சனி, 30 ஆகஸ்ட் 2008 (12:26 IST)
சிறுபா‌ன்மமக்களைக் காக்க தவறிய ஒ‌ரிசஅரசு ‌‌மீது 356வது பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடு‌க்க வே‌ண்டு‌ம் எ‌‌ன்று பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வ‌லியுறு‌த்‌தி உ‌ள்ளா‌ர்.

webdunia photoFILE
இது தொட‌‌ர்பாக அவ‌ர் வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள அ‌றி‌க்கை‌யி‌ல், ''ஒரிசா மாநிலத்தில் கிறிஸ்தவர்கள், அவர்களுடைய நிறுவனங்கள், தேவாலயங்களை, சங் பரிவார் அமைப்பினர், குறிவைத்து தாக்குதல் நடத்தி வருவதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

இந்த தாக்குதல்களை பார்க்கும் போது, சிறுபான்மை கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறை செயல், திட்டமிட்ட செயல் என்பதையும் அதை நடத்துவதற்கு மதவாதிகள் உரிய நேரத்தை எதிர்பார்த்து கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதையும் அறிய முடிகிறது.

ஒரு அமைப்பின் தலைவர் கொலை செய்யப்பட்டிருப்பதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. அதனால் அந்த அமைப்பினர் ஆத்திரம் அடைவது சரிதான். அதற்காக படுகொலைக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத சிறுபான்மை மக்களை பழிவாங்கும் நோக்கில் வன்முறையில் ஈடுபடுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.

வன்முறையை ஒடுக்க நடவடிக்கை எடுக்க பாரதிய ஜனதா பங்கேற்றுள்ள ஒரிசா மாநில அரசு தவறிவிட்டது. மக்களைக் காக்க தவறிய அந்த அரசு தொடர்ந்து பதவியில் நீடிப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை. எனவே 356வது பிரிவை பயன்படுத்தி நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த அடிப்படை உள்ளது.

பாதிக்கப்பட்டுள்ள ஒரிசாவில் மட்டுமின்றி நாடு முழுவதும் குறுகிய மத உணர்வுகளையும், அதன் விளைவாக தலைதூக்கும் வன்முறையையும் தடுத்து நிறுத்த மத்திய அரசும், மாநில அரசும், காவல் துறையும், சமுதாயத்தின் பல்வேறு துறையில் உள்ளவர்களும் முன்வரவேண்டும். இதன் மூலம் மதச்சார்பற்ற இந்தியாவை கட்டிக் காக்க உதவ வேண்டும்'' எ‌ன்று ராமதா‌ஸ் கூ‌றியு‌ள்ளா‌ர்.