த‌மிழக ஆட்சியில் பங்கு: உரிய நேரத்தில் முடிவு எடுப்போம்: தங்கபாலு!

சனி, 30 ஆகஸ்ட் 2008 (09:49 IST)
''தமிழகத்தில் ஆட்சியில் பங்குகேட்டுப் பெறுவது குறித்து உரிய நேரத்தில் முடிவு எடுக்கப்படும்'' என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.‌ி. தங்கபாலு கூ‌றினா‌ர்.

webdunia photoFILE
செ‌ன்னை‌யி‌ல் செ‌ய்‌தியாள‌ர்க‌ளி‌ட‌ம் பே‌சிய அவ‌ர், 13 நா‌‌ட்களாக ‌நீடி‌த்து வ‌ந்த விசைத்தறி நெசவாளர்களின் பிரச்னை முடிவுக்கு வந்துள்ளது பாராட்டுக்குரியது.

த‌மிழக‌த்‌தி‌ல் ஆட்சியில் பங்குபெற நாங்களும் ஆசைப்படுகிறோம். ஆனால் கொள்கை ரீதியாக முடிவு எடுக்கவேண்டியது சோனியாகாந்திதான். ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ர்க‌ள், தொண்டர்களின் விருப்பத்தை சோனியாகாந்தியிடம் நேரம் வரும்போதெல்லாம் தெரிவிக்கிறோம்.

அமைச்சரவையில் பங்கேற்க காங்கிரசுக்கும் ஆசை உள்ளது. இருப்பினும், இது குறித்து உரிய நேரத்தில், உரிய முடிவை தமிழக காங்கிரஸ் எடுக்கும்.

விஜயகாந்த் என்னுடைய அருமை நண்பர். தமிழகத்தில் மதசார்பற்ற கட்சிகள் ஓரணியில் இருக்கவேண்டும். எனவே, காங்கிரஸ் அணிக்கு விஜயகாந்த் வர வேண்டும்.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திதான் கூட்டணி குறித்த இறுதி முடிவை அறிவிப்பார் எ‌ன்று தங்கபாலு கூ‌றினா‌ர்.