சென்னை உயர் நீதிமன்றத்தில் பிரேமானந்தா சாமியார், கமலானந்தா ஆகியோர் இன்று மனு ஒன்று தாக்கல் செய்துள்ளனர். அதில், 1996ல் நாங்கள் கைது செய்யப்பட்டோம். புதுக்கோட்டை நீதிமன்றம் எங்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறியது. உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் அங்களது அப்பீல்மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
அண்ணா பிறந்தநாளையொட்டி தமிழக அரசு 100 ஆயுள்தண்டனை கைதிகளை விடுதலை செய்ய இருக்கிறது. 13 ஆண்டுகள் 9 மாதங்கள் நாங்கள் சிறையில் உள்ளோம். எனவே எங்களை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும். எங்களை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது'' என்று மனுவில் அவர்கள் தனித்தனியாக கூறியுள்ளனர்.
இந்த மனுக்கள் நிதிபதிகள் பிரபாஸ்ரீதேவன், பெரிய கருப்பையா ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இதுகுறித்து செப்டம்பர் 6ஆம் தேதிக்குள் பதில் அளிக்கும்படி உள்துறை செயலாளர், சிறைத்துறை கூடுதல் காவல்துறை இயக்குனர், திருச்சி, கடலூர் சிறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு தாக்கீது அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.